பொன்னியின் செல்வன் படத்தை கடுமையாக விமர்சித்து வரும் தெலுங்கு ரசிகர்களுக்கு தமிழ் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். மீம்ஸ் மூலமாகவும், ட்விட்டரிலும் அவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படம் இன்று காலை மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்த படம் ஏதோ கற்பனை கதை அல்ல. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த நாவலில் சில கற்பனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், பல வரலாற்று ஆதாரங்களும் இந்த படத்தில் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக தஞ்சை திருச்சி பகுதிகளை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய நாவலாக பொன்னியின் செல்வன் விளங்குகிறது. இந்த நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்து தோற்ற நிலையில், மணிரத்தினம் அதை எடுத்து சாதித்து காட்டியிருக்கிறார்.
Tamil people don’t even dare to compare your shit films like #PonniyinSelvan with the Indias Pride Bahubali
Ur #PonniyinSelvan1 cant even match this 42secs !! That’s Telugu cinema for you 👍🏻 #Prabhas #Bahubali
— Prabhas (@salaar280) September 30, 2022
Slipper shot Reply to the haters of #PonniyinSelvan1
We #Tamil cinema Should celebrate #PS1 !
Don't compare fictional story #Bahubali with #PS1 #PonniyinSelvanFDFS #kundavai #Vanthiyathevan #AdithaKarikalan #Nandini #ArunmozhiVarman #ManiRatnam #ARRahman pic.twitter.com/TB2bz740Zj— Ihansika_my_jaan (@IhansikaJ) September 30, 2022
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சிலர், பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக இல்லை படம் சுமாராக இருக்கிறது என்று ரீதியில் கருத்து தெரிவித்தனர். ஆனால் உண்மையில் மணிரத்னமின் இந்த முயற்சிக்கு நாம் பாராட்டி தெரிவித்தே ஆக வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் பல கதை மாந்தர்களும், புத்தகம் ஐந்து பாகங்களாக வெளிவந்ததாலும் இதை படமாக எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தோட்டா தரணியை கொண்டு உண்மையாக செட்டுகளை அமைத்தும், நகைகள் கூட உண்மையாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரிஜினல் தங்க நகைகளை கொண்டு வந்தும் இந்த படத்தை இயக்கி இருந்தார் மணிரத்தினம். இந்த நிலையில் சிலர் பாகுபலி அளவிற்கு இந்த படம் இல்லை என்று நெகட்டிவாக விமர்சனங்களை கூறி வந்தனர்.

மேலும் தெலுங்கு ரசிகர்கள் ஒரு படி மேலே போய் பாகுபலி இந்தியாவின் அடையாளமாக இருக்கும் ஒரு படம். அந்த படத்துடன் இந்த கருமம் பொன்னியின் செல்வனை ஒப்பிடாதீர்கள் என்ற ரீதியில் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் தமிழ் ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி இருந்தனர். பாகுபலியில் வரும் சில காட்சிகளை அவர்கள் மேற்கோள் காட்டி இது போன்ற சீன்கள் எல்லாம் எங்கள் படத்தில் இல்லை என்றும், மேலும் பாகுபலி படத்தை எடுப்பதற்கு முன்னரே ராஜமவுலி பொன்னியின் செல்வனை படித்ததற்கான ஆதாரத்தையும் தமிழ் ரசிகர்கள் போட்டு கிழித்து எடுத்து வருகின்றனர். பாகுபலி மகாபாரதம் கதையின் இன்ஸ்பிரேஷன் என்று தெலுங்கு ரசிகர்கள் கூற, ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுதான் ராஜமவுலி இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்றும் புகைப்படங்களை ஆதாரத்துடன் போட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு எதிராக கிண்டல் அடித்து வருகின்றனர்.

ராஜமவுலி பாகுபலி படத்தை எடுப்பதற்கு பல வருடங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெறும் 150 நாட்களிலேயே இரண்டு பாகங்களையும் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார். இந்த தகவல் ராஜமவுலிக்கு தெரிய வந்தபோது அவரே வியந்து பாராட்டி இருக்கிறார். பாகுபலியின் இயக்குனரே வியந்து பாராட்டி இருக்கும்போது, தெலுங்கு ரசிகர்கள் பொன்னியின் செல்வனை கிண்டல் செய்வது வேதனைக்குரியதாக இருக்கிறது.