நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல்

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோளாறு மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குயின்சியின் கையை தடவியதைக் கண்டு கொந்தளித்த அவர்கள், தற்போது மகேஸ்வரியின் காலை அசல் கோளாறு தடவியதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அசல் கோளாறு 26 வயது சென்னையை சேர்ந்த கானா பாடகர். இவர் ஜோர்த்தாலே என்ற பாட்டை பாடி மிகப் பிரபலமானார். சாதாரணமான கானா பாடலை வேகமாக பாடி அதன் பீட்டுகளை மாற்றி மக்களை மகிழ்வித்து வந்த ஒருவராக இவர் இருந்தார். அதனால் இவருக்கு பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவர் இங்கு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இவர் செய்யும் வேலைகளை கண்டு கொதிப்படைந்துள்ளனர்.

நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 1

விளம்பரம்

குறிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பெண்கள், அசல் கோளாறுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இணைய நெட்டிசன்களும் இவருக்கு எதிராக மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். கமல் எபிசோடு ஒன்றில் குயின்சியும், விக்ரமனும் பேசிக் கொண்டிருக்க, அப்போது குயின்சி கையை தடவிக் கொண்டிருந்தார் அசல் கோளாறு. பின்பு உள்ளே சென்று ஆயிஷாவின் கைகளை பிடித்து ஏதோ செய்தார். நிவாசினி மண்டையை பிடித்து தடவினார். இரவு நீச்சல் குளம் அருகில் படுத்துக்கொண்டு நிவாஸினியிடம் தனக்கென்று யாரும் இல்லை என்பது போல் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த பலரும் இவன் சரியான பொம்பளை பொறுக்கி என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.

தொடர்புடையவை  சீரியல் ப்ரோமோவுக்காக 3 நாட்கள் விரதம் இருந்து அலகு காவடி தூக்கிய மிர்ச்சி செந்தில்.! இதோ வீடியோ.!

நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 3 நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 5 நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 7நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 9 நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 11 நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 13 நேற்று குயின்சி, இன்று மகேஸ்வரி, தொடர்ந்து பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொள்ளும் அசல் 15

விளம்பரம்

இந்த நிலையில் இன்று அனைவரும் பிக்பாஸ் வாசலின் அருகே காலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்பொழுது மகேஸ்வரியின் அருகில் அசல் கோளாறு அமர்ந்திருந்தார். அப்போது கிழிந்த வகையில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருந்த மகேஸ்வரியின் கால் முட்டி வெளியில் தெரிந்தது. அந்த இடத்தை அசல் கையால் தடவிக் கொண்டிருந்தார். அப்போது மகேஸ்வரி அதை தட்டி விட்டபோதிலும், அவர் விடாமல் அதை செய்து கொண்டிருந்தார். பிறகு பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்து கொண்டு மைனாவின் கையைக் பிடித்து எதை செய்து கொண்டிருந்தார் ய. இதுபோன்று தொடர்ந்து அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்கிறார் என்று அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுக்க தொடங்கி இருக்கிறது. அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment