படம் சுத்தமா நல்லா இல்ல.! Cringe Max.! பிரின்ஸ் படத்தில் இருந்து பாதியில் எழுந்து ஓடிய ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களான அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் ஆவார். விஜய் டிவியில் இருந்த போது ஜோடி நம்பர் ஒன்னில் ஒரு சீசனில் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தார்.

படம் சுத்தமா நல்லா இல்ல.! Cringe Max.! பிரின்ஸ் படத்தில் இருந்து பாதியில் எழுந்து ஓடிய ரசிகர்கள்.! 1

விளம்பரம்

பின்னர் இவருக்கு வெள்ளித் திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் அவர் எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கே வி அனுதீப் இயக்கியிருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

தொடர்புடையவை  மனுஷன் வாழ்றான்யா.! நடிகையுடன் இரவில் மரண குத்தாட்டம் போட்ட கூல் சுரேஷ் Viral Video

படம் சுத்தமா நல்லா இல்ல.! Cringe Max.! பிரின்ஸ் படத்தில் இருந்து பாதியில் எழுந்து ஓடிய ரசிகர்கள்.! 3

விளம்பரம்

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படத்திற்க்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருந்தது. இந்த நிலையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இல்லை என்ற கருத்தையே கூறி வருகின்றனர். காமெடி என்கிற பெயரில் cringe செய்து வைத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். மக்கள் பேசிய வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Bingo Box

விளம்பரம்

Leave a Comment