துண்டை எடுத்த ஜனனி, திட்டி தீர்த்த குயின்சி.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.! முற்றிய சண்டை

அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இரண்டாவது வாரம் ஜிபி முத்து தானாக முன் வந்து வெளியேறிவிட, நடன இயக்குனர் சாந்தியை எலிமினேட் செய்து அனுப்பியுள்ளனர். தற்போது மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துண்டை எடுத்த ஜனனி, திட்டி தீர்த்த குயின்சி.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.! முற்றிய சண்டை 1

விளம்பரம்

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரம் ஒளிபரப்பும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் அனைத்து விஷயங்களையும் லைவ்வாக பார்க்க முடிகிறது. கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சண்டை, சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலும் சகப் போட்டியாளர்களை மரியாதை குறைவாக நடத்துவது, ஒருமையில் பேசுவது என்று தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனால் பலரும் நிகழ்ச்சியை ஒழுங்காக கொண்டு செல்லுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை வைக்க, அவரும் வார இறுதி நாட்கள் எபிசோடில் வந்து போட்டியாளர்களை வறுத்து எடுத்து விட்டார். தற்போது 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது.

தொடர்புடையவை  விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட ஜீவா.! கதறி அழும் ப்ரியா.!

துண்டை எடுத்த ஜனனி, திட்டி தீர்த்த குயின்சி.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.! முற்றிய சண்டை 3

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் குயின்சி மற்றும் ஜனனிக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. நேற்று இரவு குயின்சி, தனம், ஜனனி, ஷிவின் அனைவரும் நள்ளிரவில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். பிறகு ஜனனி உடை இல்லாத காரணத்தால் குயின்சியின் உடைகளை அணிந்து கொண்டு குயின்சியின் துண்டையும் எடுத்துக்கொண்டார். இதனால் குயின்சி செம்ம கோபம் அடைந்தார். ஜனனியை திட்டினார். இதனால் ஜனனி குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். மேலும் மேலும் குயின்சி பேசியதால் கடுப்பாகி கையில் இருந்த கிளாசை போட்டு உடைக்கிறார் ஜனனி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video.!

விளம்பரம்

Youtube video code embed credits: Vijay television

விளம்பரம்

Leave a Comment