சீரியலை முடித்து எண்டு கார்டு போட உள்ள ஜீ தமிழ்.! கடைசி ப்ரோமோவை வெளியானது.!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 90களில் முன்னணி முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை தேவயாணி. இவர் படங்களின் நடிக்கும் வாய்ப்பு குறைந்த பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான கோலங்கள் தொடர் சன் டிவியில் நெடுந்தொடராக பல ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அபி என்னும் கதாபாத்திரத்தில் தேவயாணி மிக அழகாக நடித்து அசத்தியிருப்பார். ஒரு ஏழைப் பெண் கார்ப்பரேட் முதலைகளிடம் படும் பாட்டை அவர் அப்பொழுதே நாடகத்தின் மூலமாக தெரிவித்து இருப்பார். தற்போது அவர் ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார்.

சீரியலை முடித்து எண்டு கார்டு போட உள்ள ஜீ தமிழ்.! கடைசி ப்ரோமோவை வெளியானது.! 1

விளம்பரம்

இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய சில நாட்களிலேயே மக்களின் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் தேவயாணி. இந்த சீரியல் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டாப் ஹிட்டு தொடர்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோலங்கள் சீரியலில் தேவயாணிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் அபிஷேக். வெகு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகின்றனர். லட்சுமி கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார் தேவயானி. இவரது நடிப்பால் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கலும் முதலிடம் பிடிக்கிறது. தேவயானிக்கு கோலங்கள் நாடகத்திற்கு பிறகு இது ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும். இதில் தேவயானிக்கு விதவை கதாபாத்திரமாகும்.

தொடர்புடையவை  "அன்பு மகத்தானது..!" விக்ரமன் போட்ட பதிவு.! அறம் முடிந்து அன்பா? கலாய்க்கும் நெட்டிசன்கள். !

சீரியலை முடித்து எண்டு கார்டு போட உள்ள ஜீ தமிழ்.! கடைசி ப்ரோமோவை வெளியானது.! 3

விளம்பரம்

கணவனை இழந்து பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் தேவயானி. அவருக்கு சமையல் கலைஞரான ஹரியுடன் இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க அவரது மகன் சந்தோஷே முடிவெடுத்து இருந்தார். பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் இந்த மாதத்துடன் முடிய இருப்பதாக ப்ரோமோவை வெளியிட்டுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Zee Tamil

விளம்பரம்

Leave a Comment