பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு ஷெரினா முதல் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி ஷெரினாவை வரவேற்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மாடலிங் துறையில் இருக்கும் பலருக்கும் ஒரு சின்ன வாய்ப்பாவது வெள்ளித்திரையில் கிடைத்து விடாதா என்று காத்துக் கொண்டி இருப்பார்கள். அந்த வகையில மிகப்பெரிய வாய்ப்பு, சூப்பர் மாடல் ஷெரினாவுக்கு கிடைத்து இருந்தது. வெள்ளித்திரைக்கு செல்லும் அடித்தளமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இருந்து வருகிறது. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக ஷெரினா கலந்து கொண்டார். ஷெரினா ஒரு சர்வதேச மாடல், கேரளாவில் பிறந்த இவர், கர்நாடகா பெங்களூரில் வளர்ந்தார். தமிழ் மற்றும் கன்னடத்தில் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

பெங்களூரில் படித்த இவர், பைலட் ஆக வேண்டும் என நினைத்தார். ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். இவர் எப்படி மாடல் ஆனார் என்ற கதை மிக சுவாரசியமானது. ஒரு முறை தனது நண்பர்களுடன் சேர்ந்து மாலுக்கு சென்ற போது அங்கு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் போட்டியாளர்களுக்கு ஆடிஷன் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஷெரினாவின் நண்பர்கள் நீயும் போய் கலந்துக்கோ என்று ஊக்கம் கொடுக்க, ஷெரினாவும் சாதாரணமாக போய் கலந்து கொண்டார். அந்த போட்டியில் 14 பேர் தேர்வானாதில், இவரும் ஒருவராக ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் ஆக ஷெரினாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று தொடங்கி முழு நேரமாக மாடலிங் செய்து வருகிறார்.

பின்னர் விஜயா மில்க், மலபார் கோல்ட், சென்னை சில்க்ஸ் போன்ற பல விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார் மேலும் ஒரு விளம்பரத்துல் நடித்துக் கொண்டிருந்த போது, சமுத்திரகனிக்கு இவரின் நடிப்பு ரொம்ப பிடித்துப் போக, தன்னுடைய படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். சமுத்திரக்கனி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான வினோதயா சித்தம் என்கிற படத்தில் சமுத்திரக் கனியுடன் நடித்தார் ஷெரினா. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானதனால் இவரின் முகம் பெரிய அளவு திரையில் தெரியவில்ல. ஆனால் பிக்பாஸுக்குப் பின்னர் இவர் பலராலும் அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் பேசி விதி மீறலில் ஈடுபட்டதாலும், தலையில் அடிபட்டதாக கூறி நாடகமாடியதாலும், பொதுமக்கள் குறைந்த வாக்குகளை அளித்து இவரை வெளியேற்றி இருக்கின்றனர்.

பிக்பாஸ் விட்டு நேராக பெங்களூர் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி சர்பிரைஸ் செய்து வரவேற்று இருக்கின்றனர். அந்த வீடியோவை ஷெரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய் டிவிக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.