பாரதிகண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் என்று ஒரு ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் ஹீரோ பாரதிக்கு குழந்தையின்மை என்று அவரது தோழி வெண்பா ஏமாற்றி வருகிறார். பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் அவர் அவ்வாறு பொய் சொல்லி வந்தார். ஆனால் பாரதி திடீரென கண்ணம்மா என்கிற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இதனால் பாரதி இந்த குழந்தைகள் தனது பிறந்தவை அல்ல என்று ஒரு முடிவுக்கு வருகிறார். எனினும் ஒரு குழந்தை பாரதியிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது.

தற்போது இந்த இரண்டு குழந்தைகளுக்கும் கண்ணம்மா தான் தாய் என்று உண்மை குழந்தைகளுக்கு தெரிய வருகிறது. ஹேமா லட்சுமி என்கிற அந்த இரண்டு குழந்தைகளையும் கண்ணம்மாவே தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இந்த நிலையில் பாரதி தனக்கு இந்த இரண்டு குழந்தைகளும் தனக்கு பிறந்தவைதான் என்று உண்மைக்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கிறார். அந்த ரிசல்ட் வந்தவுடன் இந்த முதல் பாகம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் ரசிகர்கள் இந்த நாடகத்தை முடித்து விடுமாறு தொடர்ந்து கேட்டு வருவதால் இத்துடன் இந்த நாடகம் முடிவடையும் என்று தெரிகிறது. இந்த நிலையில் திடீரென இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ என்று ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் அது உண்மையான ப்ரோமோ கிடையாது நெட்டிசன்கள் அவ்வாறு எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

அதில் வெண்பா காரில் சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவையும் ஹேமா மற்றும் லட்சுமியையும் லாரியை விட்டு மோத செய்கிறார் பின்னர் ஹேமா லக்ஷ்மி இருவரும் பிரிந்து விடுகின்றனர். கண்ணம்மாவின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஹேமா ஒரு ஏழை குடும்பத்தில் வளர்கிறார். அவர் ஆட்டோக்கார பெண்மணியாக மாறுகிறார். லக்ஷ்மி மிகப் பெரிய பணக்கார வீட்டில் வாழ்கிறார். அதனால் அவரை அவர்கள் மருத்துவம் படிக்க வைத்து டாக்டர் ஆக்குகின்றனர். ஆனாலும் இந்த இரண்டு குழந்தைகளும் கண்ணம்மாவின் நினைவில்லையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் ஆட்டோவில் ஹேமா சென்று கொண்டிருந்த போது, லட்சுமி தனது காரில் வந்து மோதிவிடுகிறார். பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.

இந்த ப்ரோமோ வேறு ஒரு சீரியலின் கதையை எடுத்து எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்று நன்றாக தெரிகிறது. ஆனால் பலரும் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர் அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video.!
Youtube Video Code Embed Credits: Digital Thirai