லத்தியை சுழற்றி ரவுடிகளை பந்தாடும் விஷால்.! லத்தி படத்தின் ட்ரைலர் இதோ.!

நடிகர் விஷால் போலீஸாக நடித்து வரும் லத்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்கிற படத்தில் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் நடிகர் விஷால். அதன் பிறகு இவர் சண்டக்கோழி, திமிரு, அவன் இவன், துப்பறிவாளன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து முடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் இன்று தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடைசியாக தயாரித்து நடித்து வெளியான படம் வீரமே வாகை சூடும். தற்போது இவர் லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் பாகம் இரண்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு லத்தி படத்தில் இருந்து டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லத்தியை சுழற்றி ரவுடிகளை பந்தாடும் விஷால்.! லத்தி படத்தின் ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

லத்தி திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் ஏ வினோத்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுனைனா திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இந்த வருடம் ஜனவரியில் தொடங்கிய போது விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சில நாட்களாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஷூட்டிங்கின் போதே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதனால் இரண்டாவது முறையாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தொடர்புடையவை  முருகதாஸ் மீண்டும் குத்திக்காட்டிய நயன்தாரா!!

லத்தியை சுழற்றி ரவுடிகளை பந்தாடும் விஷால்.! லத்தி படத்தின் ட்ரைலர் இதோ.! 3
தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. லத்தி திரைப்படம் பான் இந்தியா மூவியாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படம் வருகிறார் டிசம்பர் 22ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ட்ரெய்லரும் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: U1 Records

விளம்பரம்

Leave a Comment