வாரிசு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான அம்மா பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை சின்னக்குயில் சித்ரா பாடியிருக்கிறார். வாரிசு திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அடுத்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித் மற்றும் விஜயின் படங்கள் மோத இருக்கிறது. அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனால் இரண்டு படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. மேலும் இந்த இரு படங்களில் இருந்தும் லிரிக்கல் வீடியோக்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். இதுவரை துணிவு படத்தில் இருந்து இரண்டு பாடல்களும், வாரிசு படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வீடியோக்களை ஆர்வமாக எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தேர்வான ராஜூ ட்விட்டரில் அறிவித்திருந்தார். பின்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்கிற காரணத்தினால் அந்த ட்வீட்டை டெலிட்டும் செய்திருந்தார். இதனால் வருகிற 24-ஆம் தேதி ஆடியோ லான்ச் நடைபெறுமா என்பது தெரியவில்லை. படக்குழு தேதியை மாற்ற கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான அம்மா என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்தப் பாடலை சின்னக்குயில் சித்ரா பாடியிருக்கிறார்.

வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். மேலும் படத்தின் சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து ரஞ்சிதமே பாடலும், தீ தளபதி பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது பாடலாக இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். அம்மாவின் அருமையை உணர்த்தும் இந்த பாடலை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: T-Series