ஜிபி முத்துவின் புது வீட்டை பார்த்து இருக்கீங்களா? புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து.!

ஜி.பி முத்து தற்போது தனது பழைய வீட்டிலிருந்து மாறி புது வீட்டிற்கு குடி பெயர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிரபல டிக் டாக் செயலி மூலமாக பிரபலமானவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த ஜிபி முத்து. டிக் டாக் செயலி முடங்கிய பின்னர் youtube பக்கத்தில் தனது வீடியோக்களை பதிவேற்றி வந்தார். ஆரம்பத்தில் இவரது ரசிகர்கள் இவருக்கு காமெடியாக லெட்டர்கள் அனுப்பத் தொடங்கினர். அந்த லெட்டர்களை படிக்க தொடங்கிய அவர் அதையும் வீடியோவாக வெளியிட்டார். இதன் பின்னர் இவர் மிகப் பிரபலமானார். இதன் பிரபலம் காரணமாக அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது கைவசம் மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜி பி முத்து. மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிபி முத்துவின் புது வீட்டை பார்த்து இருக்கீங்களா? புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து.! 1

விளம்பரம்

இது மட்டுமில்லாமல் பல கோடி மக்களால் பார்த்து ரசிக்கப்படும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த சீசன் தொடங்கியதும் முதல் போட்டியாளராக அவர் உள்ளே சென்றார். பின்னர் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடித்த அவர் பணம் புகழ் அனைத்தையும் விட என் பிள்ளைகள்தான் முக்கியம் என் பிள்ளைகளை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து தானாக வெளியேறிவிட்டார். வெளியேறுவதற்கு முன்பாக அவர் கண் கலங்கி பேசியபோது கமலஹாசனே ஒரு நிமிடம் கண்கலங்கினார். இந்த நிலையில் வெளியே வந்த பிறகு அவர் சில படங்களில் நடித்து வருகிறார். பல கடை திறப்பு விழா நிகழ்ச்சிகள், சினிமா, இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் என்று பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் ஜி.பி முத்து.

தொடர்புடையவை  அர்ஜூனிடம் காசை வாங்கிக் கொண்டு சரஸ்வதியை ஏமாற்றிய சேகர்..! மீண்டும் ஓங்கும் அர்ஜூன் கை..!

ஜிபி முத்துவின் புது வீட்டை பார்த்து இருக்கீங்களா? புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து.! 3
இந்த நிலையில் அவர் தற்போது புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்து இருக்கிறார். அவருடைய பழைய வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தற்போது அவர் தனது புதிய வீட்டிற்கு மாறி இருக்கிறார். அந்த வீட்டில் இன்று அவர் பால் காய்ச்சி இருக்கிறார்m அந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் புதிய வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்று தங்களது ஆசைகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த புதிய வீட்டிற்கு வாடகைக்கு சென்று இருக்கிறாரா? அல்லது சொந்தமாக கட்டி இருக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை. அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: GP Muthu Official

விளம்பரம்

Leave a Comment