நடிகர் வினய் தற்போது மலையாள நடிகை உடன் காதலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது தீயாக பரவி வருகிறது. வினய் ஆரம்பத்தில் ஹீரோவாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர் இவர் 2007 ஆம் ஆண்டு “உன்னாலே உன்னாலே” என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் இவர் “ஜெயம் கொண்டான்” என்கிற படத்தில் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகை பாவனாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முறையாக அமைந்தது. இந்தப் படத்திற்கு பின்னர் நடிகர் வினய்க்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்பதில் குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் போன்ற பல படங்களில் நடித்து அசத்தியிருந்தார் வினய். அதன் பின்னர் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். இதற்குப் பின்னர் இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.



வினய் கடைசியாக நயன்தாராவுடன் இணைந்து கனெக்ட் என்கிற பேய் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் கைவசம் மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நான்கு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். விரைவில் இந்த படங்கள் அனைத்தும் திரையில் வெளிவர இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வினய்யும் பிரபல மலையாள நடிகையாக இருக்கும் விமலா ராமனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த தகவலை இரு தரப்பும் உறுதிப்படுத்தாத நிலையில் இன்று விமலா ராமன் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக இந்த காதலை உறுதிப்படுத்தி இருக்கிறார். கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வரும் நிலையில் தற்போது விமலா ராமன் அந்த செய்தியை உறுதிபடுத்தி இருக்கிறார்.


தனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் புகைப்படங்களை விமலா ராமன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அப்போது அவர் விமலா ராமனின் பெற்றோர்களுடன் வினயும் இருக்கிறார். மிகப்பெரிய உணவகம் ஒன்றிற்கு சென்று அவர்கள் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அதன் கேப்ஷனில் தன்னுடைய குடும்பம் என்று பதிவிட்டு இருக்கிறார் விமலா. மேலும் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் இந்த பிறந்த நாளை கொண்டாடி இருப்பதாகவும், இது தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் விமலா ராமன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 43 வயதில் காதல் மலர்ந்துள்ள வினய்க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

நடிகை விமலா ராமன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில. அவர் நடிப்பில் வெளியான படம் தான் “ராமன் தேடிய சீதை”. 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவரது நடிப்பில் குறிப்பிட தகுந்ததாக இருந்தது. பின்னர் அவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு இருட்டு என்கிற படத்திலும், 2022 ஆம் ஆண்டு கிரான்ட்மா என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் தமிழில் எந்த ஒரு பெரிய படத்திலும் நடிக்கவில்லை.