பிக்பாஸில் வெற்றி பெற்ற அசீமை அழைத்து வீட்டில் விருந்து வைத்த வனிதாவை தற்போது இணைய நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து பதிவுகளை போட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக இருந்தவர் நடிகர் அசீம். இவர் பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே சண்டையை தொடங்கினார். சண்டை போட்டாலும் கண்ணியத்தோடு போடாமல் அனைவரையும் ஒருமையில் வாடா போடா என்று பேசியும், பெண்களை வாடி போடி என்று பேசியும் சண்டையை ஆரம்பித்தார். இது ஒரு கட்டத்தில் எல்லை மீற சக போட்டியாளராக இருந்த ஆயிஷா செருப்பை கழட்டி அசீமை அடிக்கும் அளவிற்கு சென்றார். அந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் மீது வெறுப்பை காட்டி வந்தார் அசீம். அதன் பின்னர் இவர் அமுதவாணன், ஜனனி, ஏடிகே, விக்ரமன், மகேஸ்வரி என அனைவருடனும் சண்டை போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமாக இருந்த மைனாவுக்கும் இவருக்குமே சண்டை எழுந்தது.

பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் இவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பவும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கமலே ஒரு எபிசோடின் போது கூறினார். உங்களை என்னால் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்க முடியும், ஆனால் நீங்கள் தவறை உணர்ந்து மீண்டும் அதற்காக மன்னிப்பு கேட்டு திருந்தும் வாய்ப்பை பெறுகிறீர்கள். அதனால் உங்களை வெளியே அனுப்பவில்லை என்று சமாதானம் கூறினார். இருந்த போதும் கமல் முன்பு தலையை ஆட்டிவிட்டு பின்னர் வார நாட்களில், வீட்டிற்குள் சண்டையை கிளப்புவதே வாடிக்கையாக வைத்திருந்தார் அசீம். இவர் வெற்றி பெற மாட்டார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சீசன் சிக்ஸ் இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வெளியில் இருந்து வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி போன்றவர்கள் அசீமை ஆதரித்து தொடர்ந்து பேசி வந்தனர். அசீம் தான் ஜெயிக்க வேண்டும் என்று வனிதா தொடர்ந்து கூறி வந்தார். அசீன் ஒரு பி.ஆர் டீம் ஒன்றை வைத்துக்கொண்டு போலியான மெயில் ஐடிகள் தயார் செய்து அதன் வழியாக ஓட்டு போட்டு ஜெயித்தார் என்ற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத அசீம் வெளியில் வந்து தான் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் படிப்பு செலவுக்காக வழங்குவதாக அறிவித்தார். மேலும் விக்ரமன் தன்னை பற்றி தொடர்ந்து பேட்டிகளில் அவதூறு பேசி வரும் நிலையில், சிலர் தோல்வியை தாங்க முடியாத கோபத்தில் புலம்பி கொண்டிருக்கிறார்கள், அவர்களை பொருட்படுத்தாதீர்கள் என்ற ரீதியில் அசீம் பதிவுகளை போட்டு வந்தார். இந்த நிலையில் இன்று வனிதா ஒரு பதிவை போட்டிருந்தார். அது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது அசீமை வீட்டிற்கு அழைத்த அவர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டும் விருந்து சாப்பிட்டும் இருக்கிறார். அந்த புகைப்படங்களை வெளியிட்ட அவர், நாங்கள் யாருக்கும் உதாரணமாக இருப்பதற்கு இங்கு வரவில்லை, நாங்கள் விதிகளை உடைக்க இங்கே இருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார். விதிகளை உடைப்போம் என்று அவர் பதிவிட்டு இருந்தது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

பலரும் வனிதாவின் பதிவிற்கு கீழே சென்று இனம் இனத்தோடு சேர்ந்தது, விதிகளை உடைப்போம் என்று சொல்கிறீர்களே ஹெல்மெட் போடாமல் ரோட்டில் சென்று பாருங்கள், விதிகள் என்பது ஒழுக்கத்திற்காக தான். ஒழுக்கம் இல்லாத உங்களைப் போன்றவர்கள் விதிகளை பின்பற்றுவாமல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கடுமையாக சாடி வருகின்றனர். மேலும் அசீமை ஆம்பள வனிதா என்றும், வனிதாவை பொம்பள அசீம் என்றும் கடுமையான வார்த்தைகளால் சாடி வருகின்றனர்.