உனக்கு டைவர்ஸ் தர முடியாது காவ்யா.! நீதிபதி கொடுத்த மாஸ் தீர்ப்பு.! அதிர்ச்சியில் உறைந்த காவ்யா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே பாகம் 2 விரைவில் முடிவடைய இருக்கிறது. காவ்யா மற்றும் பார்த்திக்கு இடையில் நடக்கும் கேஸ் முடிவுக்கு வருவது போல தெரிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருப்பது ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த கதை குறித்து பார்த்தோமானால் பார்த்திபன் – ஜீவா என்கிற அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். இதில் பார்த்திபனுக்கு பிரியா என்கிற பெண்ணை மணம் முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரியா கடத்தப்பட்டு விடுகிறார். அப்போது பிரியாவின் தங்கை காவ்யாவை பார்த்திபனுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அங்கு ஒரு திருப்பம் என்னவென்றால், பிரியாவின் தங்கை காவியாவும் பார்த்திபனின் தம்பி ஜீவாவும் காதலித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கு டைவர்ஸ் தர முடியாது காவ்யா.! நீதிபதி கொடுத்த மாஸ் தீர்ப்பு.! அதிர்ச்சியில் உறைந்த காவ்யா.! 1

விளம்பரம்

 

எனவே தம்பியின் காதலி என்று தெரியாமலேயே அவரை திருமணம் செய்து கொள்கிறார் அண்ணன் பார்த்திபன். இவர்கள் திருமணம் ஆன நாள் தொடங்கி ஒன்றாக வாழவில்லை. இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ மனக்கசப்பு இருந்து கொண்டே இருக்கிறது. பார்த்திபனிடமிருந்து காவியா விவாகரத்து வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் காவியாவின் மனதை மாற்றி எப்படியாவது தான் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று பார்த்திபன் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் காவியா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு பார்த்திபனிடம் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பார்த்திபனும் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். இந்த ப்ரோமோவை வெளியிட்டு “இறுதிக்கட்டத்தை நோக்கி” என்று விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டுஇருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா..! எத்தனை லட்சம் தெரியுமா?

உனக்கு டைவர்ஸ் தர முடியாது காவ்யா.! நீதிபதி கொடுத்த மாஸ் தீர்ப்பு.! அதிர்ச்சியில் உறைந்த காவ்யா.! 3

இப்பொழுதுதான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது அதற்குள் இந்த சீரியல் முடிய போகிறது என்று ஈரமான ரோஜாவே சீரியலில் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இயக்குனர் தாய் செல்வம் மறைந்து விட்டதால் இந்த சீரியல் முடிவடைவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் திருமணம் ஆகி 6 மாதத்திற்குள் எதற்கு விவாகரத்து கேட்டு வந்துள்ளீர்கள் என்று நீதிபதி கேட்கிறார். தன் மாமியார் தான் விவாகரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார் என்பதை சொல்ல முடியாமல் தவித்து வருகிறார் காவ்யா. மேலும் நீதிபதி இன்னும் ஆறு மாதம் சேர்ந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Video Below..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment