தளபதி 67 படத்தின் முதல் டீசருடன் டைட்டிலை அறிவித்த படக்குழு.! டைட்டில் சும்மா தாறுமாறா இருக்கே.!

தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழ் உலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சுமார் 66 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் தான் தளபதி 67. விஜயின் 67 ஆவது படமாக இருக்கும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம், 150 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த படம் ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனைப் படைத்திருந்தது. மாநகரம், மாஸ்டர், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் உடன் கை கோர்க்க இருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தளபதி 67 படத்தின் முதல் டீசருடன் டைட்டிலை அறிவித்த படக்குழு.! டைட்டில் சும்மா தாறுமாறா இருக்கே.! 1

விளம்பரம்

தற்போது விஜய் படமும் லோகேஷ் கனகராஜன் யூனிவர்ஸ்ஸில் இணைந்து இருக்கும் செய்தி இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விக்ரம் படத்தில் சுமார் 4 நிமிடங்களில் வந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்த வசந்தி தற்போது மீண்டும் தளபதி 67 படத்தில் இணைந்திருக்கும் செய்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜன் யூனிவர்ஸ் மீண்டும் ஒருமுறை 500 கோடி வசூலை குவிக்க இருப்பதாக விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தளபதி 67 படத்தின் பூஜை தொடங்கியது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இடம் பிடித்திருக்கிறார் . மேலும் இவர்களுடன் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடித்த பலர் நடிக்க இருக்கின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லோகேஷ் கனகராஜ் படம் குறித்த அப்டேட்டுகள் பிப்ரவரி ஒன்று இரண்டு மூன்று ஆகிய தினங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

தொடர்புடையவை  அவருக்கு உண்மையில் இதுதான் நடந்தது.! கணவர் இறந்த பின்பு முதல் முறையாக பேட்டி அளித்த மீனா.!

தளபதி 67 படத்தின் முதல் டீசருடன் டைட்டிலை அறிவித்த படக்குழு.! டைட்டில் சும்மா தாறுமாறா இருக்கே.! 3
இந்த நிலையில் ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மாலை புதிய அப்டேட் ஒன்றை படக் குழு வெளியிட்டு இருந்தது. அதன்படி தளபதி 67 படத்தின் டைட்டில் அப்டேட் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது தளபதி 67 படத்திற்கு “லியோ” என பெயரிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டைட்டில்நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விக்ரம் படத்திற்கு எப்படி ஒரு டீசரை வெளியிட்டு டைட்டிலை அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்களோ, அதுபோல தற்போதும் ஒரு குட்டி டீசரை வெளியிட்டு டைட்டிலை அறிவித்திருக்கிறது படக் குழு நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment