நடிகை ஜோதிகா தனது மகள் மற்றும் மகனுடன் மும்பையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஜோ மகள் தியா பார்ப்பதற்கு அப்படியே ஜோதிகாவே போலவே இருக்கிறார். தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் 1998 ஆம் ஆண்டு ஹிந்தி படம் ஒன்றில் நடித்தார். 1999 ஆம் ஆண்டு வாலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் அடுத்த ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, குஷி, ரிதம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திருத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜய் அஜித் சூர்யா விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.

அதன் பின்னர் இவர் பூவெல்லாம் உன் வாசம், லிட்டில் ஜான் பிரியமான தோழி, காக்க காக்க, பேரழகன், மன்மதன், சில்லுனு ஒரு காதல், சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு போன்ற பல படங்களின் நடித்து முடித்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு மொழி படத்திற்கு பின்னர் அவர் நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே என்கிற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்தன் மூலம் திரைத்துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார் ஜோதிகா. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராட்சசி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பின்னர் இவர் உடன்பிறப்பே என்கிற படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்தார்.

தற்போது கைவசம் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்கிற படத்திலும், ஸ்ரீ என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்திருக்கிறார் ஜோதிகா. ஜோதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வழக்கம்.

தற்போது ஜோதிகா தனது மகள் மற்றும் மகனுடன் இணைந்து மும்பையில் உள்ள ஒரு திருமணதிற்கு சென்று இருக்கின்றனர். அந்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோதிகா மகள் தியா பார்ப்பதற்கு அப்படி ஜோதிகா போலவே இருக்கிறார். தேவ் அப்படியே சூர்யா போலவே இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.