நீ ஒரு அருமையான அயோக்கியன்.! டைட்டில் வின்னர் என்றும் பாராமல் அசீமை பங்கம் செய்த குரேஷி.!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் விஜய் டிவியில் ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா என்கிற நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை குரேஷி மற்றும் மாகாபா இருவரும் இணைந்து மரணமாக கலாய்த்து இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவடைந்திருந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ஷிவின், விக்ரமன், அசீம் என மூன்று பேர் இறுதி மேடையை அலங்கரித்தனர். இதில் விக்ரமன்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அசீமை வெற்றியாளராக அறிவித்திருந்தார் கமல். இது இணையத்தில் பல சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், தற்போது வரை தொடர்ந்து இந்த சர்ச்சைகள் ஓயாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ ஒரு அருமையான அயோக்கியன்.! டைட்டில் வின்னர் என்றும் பாராமல் அசீமை பங்கம் செய்த குரேஷி.! 1

விளம்பரம்

அசீம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தொடர்ந்து தனது ரசிகர்களை அழைத்துச் செல்கிறார். மேலும் கோப்பையை எங்கு சென்றாலும் தூக்கி கொண்டே செல்கிறார் போன்ற விமர்சனங்கள் அவர் மீது எழுந்து கொண்டே இருந்தது. பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரு டைட்டில் வின்னர் இவ்வாறு விமர்சிக்கப்படுவது இதுவே முதன்முறையாக இருக்கிறது. இந்த நிலையில் அசீமை அனைவரும் புறக்கணித்துவிட்டு மற்ற ஹவுஸ் மேட்ஸ் விக்ரமனுடன் போட்டோ எடுத்துக் கொள்வதும், அவருடன் சந்திப்பு நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அசீமுக்கு ஆதரவாக தனலட்சுமி மணிகண்டன் போன்ற ஒரு சிலரே இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்கிற வசனத்தை போட்டு இவர் மேலும் கேலிக்கு உள்ளானார். பலரும் அசீமை மரணமாக கலாய்த்து வந்தனர். ட்விட்டரில் கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கிலும் இருந்து வந்தார்.

தொடர்புடையவை  ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் போட்டியாளர் கானா சேட்டு.! நடுவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

நீ ஒரு அருமையான அயோக்கியன்.! டைட்டில் வின்னர் என்றும் பாராமல் அசீமை பங்கம் செய்த குரேஷி.! 3

விளம்பரம்

இருந்தபோதும் எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேட்டிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.அதுபோல மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து நடத்தி வரும் ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் அசீம். அப்போது அசீமை பார்த்து மாகாபா, “ராஜூ பிக்பாஸ் ஜெயிச்ச போது ராஜூ வீட்ல பார்ட்டி என்று நடத்தினார்கள், அது போல அசீம் இப்போது டைட்டிலை ஜெயிச்சு இருக்காரு, அதனால் அசீம் வீட்டுல ஆன்ட்டி என்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா” என்று கலாயத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த குரேஷி, “நீ ஒரு அருமையான அயோக்கின், விக்ரமன் ஃபேன்ஸ் மீட்டுல கடைசி வரிசையில உக்காந்துட்டு வந்தியா” என்றும் மரணமாக கலாயத்து தள்ளினார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment