மணகோலத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் பார்த்தியும் காவ்யாவும் சேர்ந்து போடுற ஆட்டத்தை பாருங்க.!

ஈரமான ரோஜாவே சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக இருக்கும் சித்தார்த் மற்றும் கேபி இருவரும் மணக்கோலத்தில் தற்போது ட்ரெண்டிங் பாடலாக இருக்கும் மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அதை வீடியோவாக பதிவிட்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. தம்பி காதலித்த காவியாவை அண்ணன் பார்த்தியும், அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியாவை தம்பி ஜீவாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஜோடிகள் மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆரம்பத்தில் இந்த கதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த கதையை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக பார்த்தி மற்றும் காவியாவின் ரொமான்ஸ் காட்சிகளுக்காக இந்த நாடகத்தை பலரும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மணகோலத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் பார்த்தியும் காவ்யாவும் சேர்ந்து போடுற ஆட்டத்தை பாருங்க.! 1

விளம்பரம்

இந்த சீரியலை இயக்கி வந்த இயக்குனர் தாய் செல்வம் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், வேறொரு இயக்குனர் சீரியலை இயக்கி வருகிறார். தற்போது பரபரப்பான இறுதி நிமிடங்களுடன் இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது. குறிப்பாக முதல் திருமணம் அவசரக் கதியில் நடந்ததால் இரண்டாவதாக பார்த்திபன் மற்றும் காவியாவிற்கு திருமணம் செய்ய திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பார்த்திக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க துடித்துக் கொண்டிருக்கும் பார்த்தியின் அத்தை இந்த திருமணத்தை தடுக்க போலீஸை வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். திருமணத்தன்று மேடைக்கு வரும் போலீஸ் பார்தியை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். பின்னர் என்ன நடக்கும்? பார்த்தி காவியா திருமணம் நடைபெறுமா? என்பதெல்லாம் மிகுந்த சஸ்பென்சில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விரைவில் இந்த நாடகம் முடிவடைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தொடர்புடையவை  சாம் விஷாலின் 23வது பிறந்தநாள்.! கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்த சிவாங்கி

மணகோலத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் பார்த்தியும் காவ்யாவும் சேர்ந்து போடுற ஆட்டத்தை பாருங்க.! 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் கதாநாயகியாக இருக்கும் கேபி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத்தின் மூலமாக அறிமுகமானவர். அதேபோல் பார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்தார்த்தும் விஜய் டிவியில் ஏற்கனவே தேன்மொழி உள்ளிட்ட சில நாடகங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இருவரும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றனர். சீரியலுக்காக மணக்கோலத்தில் இருக்கும அவர்கள் மைனர் வேட்டி கட்டி என்ற ட்ரெண்டிங் பாடலுக்கு instagram-ல் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment