நடிகை நிரோஷா இன்று தனது 52வது பிறந்த நாளை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மகளும், ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நடிகை நிரோஷா மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

சில ஆண்டுகள் மட்டுமே ஹீரோயினாக நடித்த அவர், ராம்கியை 1995ம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் நடிப்பதை கைவிட்டார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து துணை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

கடைசியாக 1995ம் ஆண்டு ‘புதிய ஆட்சி’ என்கிற படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் திரைத்துறையிலிருந்து விலகினார். பின்னர் ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் வந்த அவர், ‘பிரியமான தோழி’, ‘மலைக்கோட்டை’, ‘சிலம்பாட்டம்’, ‘கத்திச்சண்டை’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்திருக்கிறார். நிரோஷாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த சின்னத்திரை தொடர் என்று சொன்னால் அது ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தான்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் பெரிய பாப்பாவாக நடித்து அசத்தியிருந்தார் நிரோஷா. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டில் கோமதி என்கிற கதாபாத்திரத்தில் பாண்டியனுக்கு மனைவியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு இன்று 53வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் நடிகர்கள் அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பலரும் நிரோஷாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
View this post on Instagram