பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரி பாட்டி கோபியை சந்தித்து பேச வேண்டும் உடனே அவனை கோவிலுக்கு வரச் சொல் என்று செழியன் இடம் சொல்லி போன் செய்ய சொல்கிறார். செழியனும் கோபிக்கு போன் செய்து பேசுகிறார் இதனால் ராதிகா பயங்கர கடுப்பில் இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் கோபிக்கு இரண்டாவதாக ராதிகாவுடன் திருமணம் முடிந்தது. திருமணமான நாள் தொடங்கி ராதிகாவுடன் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் மனமுடைந்து போன கோபி தொடர்ந்து குடிக்கு அடிமையாகிறார். அவர் குடியால் சீரழிந்து வருகிறார். மேலும் அதிகமாக குடித்துவிட்டு ஒரு முறை நடு ரோட்டில் விழுந்து கிடக்கிறார். அவரின் மொபைல் போனிலிருந்து பாக்யாவிற்கு அழைப்பு வர பாக்யாவும் எழிலும் சென்று அவரை மீட்டு ராதிகாவின் வீட்டில் பத்திரமாக விட்டு வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிபோதையில் கோபி ராதிகாவிடம் உளறுகிறார். ராதிகாவை பார்த்தாலே பயமாக இருக்கிறது, அவள் பேய் மாதிரி சண்டை போடுகிறாள் என்றெல்லாம் உளறி கொட்டுகிறார். இதனால் கடுப்பான ராதிகா கோபியிடம் அந்த நிலைமையிலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் சீக்கிரம் உங்களை விட்டு வெளியே போகிறேன் என்றும் அவர் சண்டை போடுகிறார். ஏற்கனவே ராதிகாவின் முதல் கணவர் அதிகமாக குடித்துவிட்டு சண்டை போடும் காரணத்தினால் தான் ராதிகா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றிருப்பார். மீண்டும் இரண்டாவதாக பாக்யாவின் கணவரான கோபியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கோபியும் குடிக்கு அடிமையாக இருப்பதால் ராதிகா கோபியிடம் கோபித்துக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோபிக்கு தற்போது முதல் மனைவி பாக்யாவும் அவரின் குடும்பமும் முக்கியமானதாக தெரிகிறது. இந்த நிலையில் கோபியின் நிலைமையை அறிந்த ஈஸ்வரி பாடிய தற்போது கலங்கி போயிருக்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி பாட்டி செழியனிடம் கோபிக்கு போன் செய்து கோவிலுக்கு உடனே வரச் சொல் நான் அவனிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். இந்த செய்தியை செழியன் கோபிக்கு போன் செய்து கூற, அதை பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் ராதிகா. மேலும் பாக்கியாவின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தப் போகிறீர்களா? என்று கோபமாக கேட்கிறார். அவர்கள் உங்களிடம் பேச வேண்டும் என்றால் இங்கு வந்து பேச வேண்டியதுதானே என்று சண்டை போடுகிறார். தொடர்ந்து கோபியை நிம்மதி இல்லாமல் செய்து வருகிறார் ராதிகா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television