ஹரிஷ் பிரபு இயக்கிய திருவின் குரல் திரைப்படத்தைப் பற்றி தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறிய விமர்சனமாவது ஹீரோவால் வாய் பேச முடியாது, அவர் தன்னுடைய அப்பாவின் கன்ஸ்ட்ரக்ஷன் வேளையில் உடனிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அப்பாவிற்கு ஒரு விபத்து ஏற்பட்டு மண்டையில் அடிபடுகிறது. அதனால் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு காசுக்காக கொலை செய்யும் ஒரு நான்கு வில்லன்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே இவர்களுக்கும் ஹீரோவிற்கும் உரசல் ஏற்படுகிறது. பின்பு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. நாம் எப்போதும் சொல்வது போல் படம் என்றால் வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் ஆரம்பத்தில் வில்லன்களை மிக ஸ்ட்ராங்காக காட்டினர். ஆனால் முடிக்கத் தெரியாமல் திண்டாடி விட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வில்லனுக்கும் ஹீரோவிற்கும் உரசல் ஏற்பட்ட உடனேயே அடுத்த கட்டமாக வில்லன் ஹீரோவை கொலை செய்வதாக தான் இருக்க வேண்டும். ஆனால் அவனை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று வில்லன்கள் அந்த விஷயத்தை தள்ளிப் போடுகின்றனர். ஹீரோவின் அக்கா மகள் ஒருவர் இருக்கிறார். அவர் இந்த ரவுடிகள் செய்யும் சம்பவம் ஒன்றை பார்த்து விடுகிறார். இதைப்பற்றி அவர் படம் முடியும் வரை யாரிடத்திலும் சொல்லவில்லை. ஹீரோவின் அக்கா மகள் உயிருடன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று தெரிந்தும் அவரையும் ஒன்றும் செய்யாமல் வில்லன்கள் விட்டு வைத்திருக்கிறார்கள். அதேபோல் ஹீரோ ஏன் வாய் பேச முடியாது என்பதற்காக ஒரு ஸ்ட்ராங்கான காரணம் கூறவில்லை. ஆங்கில படம் ஒன்றில் கண் தெரியாதவர் ஒருவர் வீட்டில் மூன்று பேர் திருடர்கள் நுழைந்து விடுவார்கள். அவர்களை கண் தெரியாமல் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது சுவாரசியமாக இருக்கும். அது போன்ற எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வாய் பேச முடியவில்லை என்று மட்டும் ஹீரோவை காட்டுகிறார்கள்.

அதேபோல் இவ்வளவு கொலை நடக்கிறது ஆனால் போலீஸ் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வில்லன் அமர்ந்து கொண்டு இரண்டு நாளில் இங்கு போலீஸ் வருவான் பார், அவன் நம்மை தேடி வருவான் பார் என்று போன்ற வசனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர் இஷ்டத்திற்கு பேசுவது போல் இருக்கிறது. அருள்நிதி எப்பொழுதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார். ஆனால் இந்த படம் வித்தியாசமான முறையில் படம் எடுக்கிறேன் என்று எடுத்து இருக்கிறார்கள் ஆனால் லாஜிக் ஓட்டைகள் அங்கங்கே நம்மை வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். வித்தியாசமான முயற்சி தற்போது வீண் முயற்சியாக மாறிவிட்டது என்று தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அவரது வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies