வித்தியாசமான கதையில் சித்தார்த் நடித்துள்ள “டக்கர்” படத்தின் டீசர் வெளியானது.! தாறு மாறு டீசர்.!

நடிகர் சித்தார்த்த் நடித்திருக்கும் டக்கர் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. நடிகர் சித்தார்த்துக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 மற்றும் சித்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்று சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படக் குழுவினர் காலையில் ஒரு போஸ்டரை வெளியிட்டு சித்தார்த்தை வாழ்த்தியிருந்தனர். மேலும் இயக்குனர் அருண்குமார் இயக்கி வரும் சித்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமலஹாசன் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து தற்போது டக்கர் படத்தின் டீசரும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கியிருக்கிறார். காதல், ரொமான்ஸ், ஆக்‌ஷன் ஆகியவற்றின் கலவையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதையில் சித்தார்த் நடித்துள்ள "டக்கர்" படத்தின் டீசர் வெளியானது.! தாறு மாறு டீசர்.! 1

விளம்பரம்

இந்த படத்தில் குறுந்தாடியுடன் காலேஜ் பாய் போல செம ஸ்டைலான லுக்கில் சித்தார்த் நடித்திருக்கிறார். சித்தார்த்தத்திற்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யுசிங், முனிஷ்காந்த், ஆர் ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நீண்ட நாட்களாக இந்த படம் வெளியாகாமல் இருந்து வந்தது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த படம் வருகிற மே 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகிய இருவர் தயாரித்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்திலிருந்து டீசர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தொடர்புடையவை  மயில்சாமியின் இரு மருமகளும் விவாகரத்து கேட்கிறார்களா? நடந்தது என்ன? விளக்கம் கொடுத்த மகன்.!

வித்தியாசமான கதையில் சித்தார்த் நடித்துள்ள "டக்கர்" படத்தின் டீசர் வெளியானது.! தாறு மாறு டீசர்.! 3
அந்த டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment