நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இடம் நெட்டிசன்கள் சிலர் வம்பிழுத்திருக்கும் நிலையில், 52 வயசு கிழவிடா நானு, எனக்கு போய் இப்படி அனுப்பி இருக்கீங்களேடா என்று சொல்லி ஆபாச மெசேஜ் அனுப்பியவர்களை வறுத்து எடுத்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் பிரபல நடிகை லட்சுமியின் ஒரே மகளாவார். இவர் பல படங்களில் நடித்திருந்த போதிலும் சூர்யா நடித்த ஆறு படத்தில் இவர் சவுண்டு சரோஜாவாக நடித்த புகழ் பெற்றிருந்தார். “குளிக்கிற இடத்திற்கு கோழி குஞ்சு வருதாக்கும்” என்கிற ஒரே ஒரு டயலாக் இவரை பிரபலமாக்கியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷாவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் அபியும் நானும் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் எந்த கதாபாத்திரமும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஐஸ்வர்யா நானே சோப் செய்து வீடு வீடாக விட்டு பிழைத்து வருவதாக பேசியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவரது தாய் லட்சுமி பிரபல நடிகையாக இருந்த போதிலும் அவருடைய கைகளை நான் எதிர்பார்க்கவில்லை, அவருக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது, எனவே தந்தை எனக்கு அளித்த வீட்டில் நான் வசித்து வருகிறேன், தற்போது நானே என் கையால் சோப் செய்து அதை வீடு வீடாக சென்று விற்பனை செய்து அதில் குடும்பம் நடத்தி வருவதாக பேசி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யானை படத்திலும் டாடா படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் பெண்கள் தொடர்பான மேக்கப் சாதனங்கள், சோப் உள்ளிட்ட பொருட்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இதற்காக அவர் தனது whatsapp எண்ணை பொதுவெளியில் பகிர்ந்திருந்தார். தற்போது அந்த எண்ணிற்கு ஆபாச முறையில் விஷமிகள் சிலர் மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

வயது முதிர்ந்த ஆண்கள் கூட அந்தரங்க உறுப்புக்களை புகைப்படம் எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளனர். பொறுத்து பொறுத்து பார்த்த ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் கோபமாகி தற்போது அவர்கள் அனைவரையும் திட்டி வீடியோ போட்டு இருக்கிறார். அதில் வயதானாலும் நீ சும்மா கும்முனு இருக்க என்று அருவருக்கத்தக்க ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்புகின்றனர், இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியவில்லையா. 52 வயது கிழவிடா நானு, சோப்பு தான் விக்கிறேன், என்னை விற்கவில்லை என்று கோபமாக பேசி வீடியோவை சொல்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி இருக்கிறது. பலரும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். பொதுவெளியில் மொபைல் நம்பரை ஷேர் செய்வது இது போன்ற பல பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் அதனால் இனி பொதுவெளியில் மொபைல் ஃபோன்களை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Multi Mommy