பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்து இருக்கீங்களா? வீட்டின் ஹோம் டூர் வீடியோ இதோ.!

பிக்பாஸில் கலந்து கொண்டு பல இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்த அக்ஷரா ரெட்டி தற்போது தனது மிகப்பெரிய வீட்டை சுற்றிக் காண்பித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கண்ணாடிகளால் ஆன கதவுகள், கண்ணாடிகளால் ஆன படிக்கட்டுகள், பால்கனிகள் என்று மிக பிரம்மாண்டமாக அந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடல் அழகியாக இருந்து பிக்பாஸில் கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி. பிக்பாஸ் சீசன் 5 வில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து இவர் யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 150-க்கும் மேற்பட்ட மேடைகளில் ராம்ப் வாக் செய்திருக்கும் இவர், மிஸ் இந்தியா சவுத் போட்டியில் பங்கேற்று பட்டத்தையும் பெற்றிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்து இருக்கீங்களா? வீட்டின் ஹோம் டூர் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

மேலும் இந்தியாவின் பிரதிநிதியாக சர்வதேச அழகு போட்டியான மிஸ் சூப்பர் ப்ளூ வேர்ல்ட் 2019 ஆம் ஆண்டிற்கான பட்டத்தையும் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த அவர் 2015 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படத்தில் நடித்தார். ஹாப்பி நியூ இயர் என்று பெயரிடப்பட்ட அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. பின்னால் சிவந்த கண்கள் என்கிற ஆல்பம் பாடலில் தோன்றினார். இந்த பாடல் அக்ஷராவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக ஏற்படுத்தியிருந்தது. முதல் தலைகீழ் இசை ஆல்பம் ஆக இந்த பாடல் இருந்தது. தற்போது அக்ஷராவிற்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. பிக் பாஸில் இருந்த போது இவருக்கும் அதன் மற்றொரு போட்டியாளராக வருணுக்கும் அக்‌ஷராவுக்கும் நல்ல நட்பு இருந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று அப்போது யூகங்கள் கிளம்பியது. ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தொடர்புடையவை  மலேசியன் கோவிலில் சிறகடிக்க ஆசை மீனா சாமி தரிசனம்..!

பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்து இருக்கீங்களா? வீட்டின் ஹோம் டூர் வீடியோ இதோ.! 3

விளம்பரம்

பிக்பாஸில் இருந்து வெளியான பிறகு அக்ஷராவும் வருணும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து வருகின்றனர். இருவரும் வெளியில் செல்வது, அவுட்டிங் செல்வது என்று அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அக்ஷரா வீட்டின் ஹோம் டூர் தற்போது வெளியாகியிருக்கிறது. கண்ணாடிகளாலான கதவுகள், படிக்கட்டுகள், மிகப்பெரிய பங்களா என வீடு மிக பிரம்மாண்ட முறையில் அமைந்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Cineulagam

விளம்பரம்

Leave a Comment