விஜய் ஆண்டனியின் தெறி நடிப்பில் “பிச்சைக்காரன் 2” ட்ரைலர் வெளியானது.! இதோ வீடியோ.!

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிச்சைக்காரன் 1 படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படம் வருகிற மே 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது கைவசம் பலப்படங்களில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், கொலை, ரத்தம், காக்கி, பிச்சைக்காரன் 2 போன்ற பல படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தமிழரசன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. ஆனால் பிச்சைக்காரன் பாகம் இரண்டு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் பாகம் அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் இடம் இருப்பதால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் தெறி நடிப்பில் "பிச்சைக்காரன் 2" ட்ரைலர் வெளியானது.! இதோ வீடியோ.! 1
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் எடுக்கப்பட்டிருந்த போது விஜய் ஆண்டனிக்கு பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. அவருடைய தாடை பற்கள் அனைத்தும் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தாடை மற்றும் மூக்கு எலும்புகள் ஒன்றாக சேர்ந்து விட்டது என்று சொல்லி மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியிருந்தார். சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகளை ஸ்னீக் பீக் வீடியோ போல வெளியிட்டு இருந்தார். பணம் உலகை காலி பண்ணிவிடும் என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார் விஜய் ஆண்டனி. மேலும் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  நயன்தாரா நடிக்கும் 75வது படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு.! என்னனு தெரியுமா?

விஜய் ஆண்டனியின் தெறி நடிப்பில் "பிச்சைக்காரன் 2" ட்ரைலர் வெளியானது.! இதோ வீடியோ.! 3

மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவியா தப்பார் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். மேலும் இவரின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment