தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் மற்றும் சரஸ்வதியை தேடி வரும் சந்திரகலா அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால் சந்திர கலா இருவரையும் புரிந்து கொண்டு திருந்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் கமெண்ட்களில் கோதையை காட்டிலும் சந்திரகலா நல்லவர் என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழும் சரஸ்வதியும் தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடராக இருந்து வருகிறது. கோதை இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வரும் கோதையின் இரு மகன்கள் தான் தமிழ் மற்றும் கார்த்திக். இத்தனை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை காப்பாற்றி வளர்த்து வந்தனர். கோதையின் எதிராளியாக இருக்கும் அர்ஜுன் தமிழின் தங்கையை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்குள் நுழைகிறார். அவர் இந்த குடும்பத்தை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று சதி திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியும் பெறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோதையின் கையாலேயே தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்பும்படி அர்ஜுன் செய்துவிட்டார். இதனால் தனியாக பிரிந்து வந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தற்போது தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி தமிழுக்கு தெரியாமல் மெக்கானிக் ஷாப்பிற்க்கு வேலைக்கு சென்று குடும்பத்தின் பாரத்தை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கோதையின் இரண்டாவது மருமகளாக இருக்கும் வசுந்தரா தற்போது கர்ப்பமாக இருந்தார். அவர் படிக்கட்டுகளில் ஏற முயற்சி செய்தபோது வழுக்கு கீழே விழுந்து வயிற்றில் அவருக்கு பலமாக அடிபடுகிறது. அப்போது வசந்தராவிற்கு ஃபோன் செய்து கொண்டிருக்கும் சரஸ்வதிக்கு ஏதோ தவறு நடப்பது தெரிந்தது உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்கிறார். அப்போது வசுந்தரா அங்கு கீழே கிடப்பதை பார்த்து மருத்துவமனையில் அனுமதிக்கிறார். மேலும் வசுந்தராவிற்கு ரத்தம் தேவைப்பட்டதால் உடனடியாக ரத்தம் கொடுக்கும் உதவுகிறார் சரஸ்வதி.இதையெல்லாம் பார்த்து சந்திர கலா நெகிழ்ந்து போனார்.

மேலும் மருத்துவர் நீங்கள் யாருக்காவது நன்றி சொல்ல விரும்பினால் சரஸ்வதிக்கு நன்றி சொல்லுங்கள். அவர்தான் சரியான சமயத்தில் வந்து உங்கள் மகளையும் பேரனையும் காப்பாற்றினார் என்று கூறுகிறார். இதனால் மனம் நெகிழ்ந்து போன சந்திரகலா தனது பிறந்த பேரனை தூக்கிக் கொண்டு சரஸ்வதி இடம் முதலில் கொடுக்கிறார் .என் பேரனை காப்பாற்றிய நீதான் முதலில் அவரை தூக்க வேண்டும் என்று சொல்லி அவர் கைகளில் கொடுக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சந்திரகலா, தமிழ் மற்றும் சரஸ்வதி வசிக்கும் வீட்டிற்கு வருகிறார். உங்கள் இருவரையும் நான் இத்தனை நாள் தவறாக புரிந்து கொண்டேன் என்று கூறுகிறா.ர் தமிழும் குழந்தையை நான் பார்க்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார். இதனால் மீண்டும் பிரிந்த குடும்பம் ஒன்றாக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த நெகழ்ச்சியான ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television