விஜய் தொலைக்காட்சியின் தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் தனக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை என்பதை தெரிந்து கொள்வதற்காக வெற்றி பிற ஊர்களுக்கு செல்ல இருப்பதாக கூறுகிறார். மேலும் சுடர் பற்றிய உண்மை தெரிந்தால் தான் செத்து விடுவேன் என்று சொல்லி அபி விஜி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவி பல வெற்றி தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தென்றல் வந்து என்னை தொடும் தொடரும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது பல திருப்பங்களுடன் இந்த தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் கதாநாயகன் வெற்றிக்கும், கதாநாயகி அபிக்கும் பிறந்த குழந்தை சுடரை வைத்து தற்போது கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சுடர் தனக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் என்பதை தெரிந்து கொள்வதற்காக வெற்றி அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் அபி தற்போது கலெக்டராக இருக்கிறார். அவர் கலெக்டராக வேலை பார்க்க வந்த ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று சுடரின் பர்த் சர்டிபிகேட்டை தேடப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று மாநிலங்களில் தான் சுடர் பிறந்து இருக்க வேண்டும். அதை கண்டுபிடிக்க போவதாக வெற்றி கூறிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கண்மணி அபிக்கு போன் செய்து சுடரின் பிறப்பு பற்றிய உண்மையை விஜி அம்மா வெற்றியிடம் கூறப் போவதாக போட்டுக் கொடுக்கிறார். சுடரை வெற்றியுடன் சேர்த்து வைக்க விஜி முயற்சி செய்து கொண்டிருப்பதாக அபியிடம் கூறுகிறார். இதனால் அபி விஜியை வரவழைத்து நீங்கள் சுடர் பற்றிய உண்மையை வெற்றியிடம் சொல்ல மாட்டேன் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் அப்படி சொன்னால் நான் இறந்து விடுவேன் என்று விஜியை மிரட்டுகிறார். இதனால் விஜியும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

சுடர் வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் என்கிற உண்மை விரைவில் தெரிய வரவேண்டும் என்பது தென்றல் வந்து என்னை தொடும் ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு சுடர் தன்னுடைய குழந்தை என்று தெரியாமலேயே வெற்றி இப்படி பரிதவித்துக் கொண்டிருக்க முடியும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television