உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, உதயநிதி ஸ்டாலினால் தயாரிக்கப்பட்டு வரவிருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படமாகும். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 29ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் ஆகியோர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் இணைந்து நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு A. R. ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் மூலமாக முதல் முறையாக செல்வராஜ் இணைந்து பணியாற்றுகிறார் AR ரஹ்மான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் அறிவிப்பு வெளியான அதே மாதத்தில் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிவடைந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா துறையில் இருந்து தடை நீக்கப்பட்ட பின்னர் பெரும் வரவேற்புடன் வடிவேலு இந்த படத்தில் இணைந்தார். இரண்டாவது படப்பிடிப்பு மே 2022 இல் தொடங்கியது, ஃபஹத் அப்போது படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். ஜூன் 2022 இல், உதயநிதி, ட்விட்டர் மூலம், கேக் வெட்டும் கொண்டாட்டத்துடன் இரண்டாவது படபிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். ஆகஸ்ட் 2022 இல், உதயநிதி இறுதி ஷெட்யூலுக்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. தற்போது படத்தில் இருந்து ட்ரைலர் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியகியுள்ள மாமன்னன் படத்தின் ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South