ஜீ தமிழின் “தவமாய் தவமிருந்து” தொடரில் இருந்து திடீரென விலகிய நடிகை .! இனி இவருக்கு பதில் இவர்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தியா சீரியலை விட்டு திடீரென விலகி இருக்கும் நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் நடிகை மலர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. சீரியலில் இருந்து நடிகர்கள் அப்போது விலகுவது சகஜமாகி இருக்கிறது. முன்பெல்லாம் சீரியல்கள் என்றாலே இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் வரை எடுப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் ஐந்து வருடங்கள், ஆறு வருடங்கள் என்று நீண்டு கொண்டே இருப்பதால் நடிகர்கள் தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கையை பார்ப்பதற்காக சீரியலை விட்டு விலகுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தியா திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சன் தொலைக்காட்சியில் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் நடிகை சிவன்யா தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

தொடர்புடையவை  KARMA-ன்னு ஒன்னு இருக்கு..! உன்னையும் போட்டு மிதிப்பாங்க..! Priyanka-ஐ தாக்கி பேசிய Anitha Sambath..!

ஜீ தமிழின் "தவமாய் தவமிருந்து" தொடரில் இருந்து திடீரென விலகிய நடிகை .! இனி இவருக்கு பதில் இவர்.! 1

விளம்பரம்

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியல். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்று ரசிகர்களால் விரும்பப்படும் சீரியலாக மாறி இருக்கிறது. தவமாய் தவமிருந்து சீரியல் கடந்த ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தில் பசங்க படத்தில் நடித்த சிவக்குமார், அனிதா நாயர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் தீனு நிரோஷினி, பாண்டி கமல், மகேஷ் ஜி, யாழினி ராஜன், கருணா விலாசினி, சங்கீதா பாலன், சாய் சக்தி, கானா ஹரி, மரியா ஜீலியனா, புவியரசு, சந்தியா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தியா திடீரென சீரியலை விட்டு விலகி இருந்தார்.

ஜீ தமிழின் "தவமாய் தவமிருந்து" தொடரில் இருந்து திடீரென விலகிய நடிகை .! இனி இவருக்கு பதில் இவர்.! 3

விளம்பரம்

அவருக்கு பதிலாக செவ்வந்தி சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிவன்யா மலர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்க இருப்பது குறித்து சிவன்யா கூறும் பொழுது, “இந்த மலர் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் பிரதாப் மணிக்கு தன்னுடைய நன்றிகள், இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வழங்குவேன், தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி” என்றும் பேசி இருந்தார். சின்னத்திரையில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக நடிகை சிவன்யா இருக்கிறார். இவர் திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ZeeCafeTamil (@zeecafetamil)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment