மரண மாஸாக வெளியானது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் Prevue டீஸர்.!

இயக்குனர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் இருந்து தற்போது இரண்டு நிமிட காட்சியை குட்டி டீசர் போல படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லி. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து ஜவான் என்கிற படத்தை எடுத்து வருகிறார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. அதன் பின்னர் தெறி மெர்சல் பிகில் என்று வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவே தொடர்ந்து விஜயை வைத்து மூன்று வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து சாதனையை நிகழ்த்திக் காட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டிற்கு சென்ற அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மற்றும் தமிழின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா இருவரையும் வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரண மாஸாக வெளியானது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் Prevue டீஸர்.! 1

விளம்பரம்

மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பிரியாமணி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ஷாருக்கானும், அவரது மனைவி கௌரி கானும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்த படம் முடிந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  ரம் பம் பம் ஆரம்பம்..காபி வித் காதல் படத்தின் first சிங்கிள் ப்ரோமோ வெளியானது.. யுவனின் அடுத்த ஹிட் சாங் ரெடி..

மரண மாஸாக வெளியானது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் Prevue டீஸர்.! 3
படம் வெளியாக இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாக ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில் இன்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் பிரிவ்யூ(Prevue) வெளியிடப்பட்டிருக்கிறது. தலையில் கட்டுடன் ரயில் நிலையத்தில் ஷாருக்கான் அமர்ந்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை பல மாதங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். தற்போது அந்த கட்டை அவிழ்த்த பின்பு மொட்டை தலையுடன் மெட்ரோ ரயிலில் ஷாருக்கான் ஏறி சண்டைக்கு தயாராவது போல மாஸான வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகளும் பார்வையாளர்களும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Red Chillies Entertainment

விளம்பரம்

Leave a Comment