காவேரியை கழட்டி விட்டு ராகினியுடன் ஊர் சுற்றும் நிவின்.? பார்த்துவிட்ட கங்கா.! இனி நடக்கப்போவது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிவின் தனது அத்தை மகள் ராகினியுடன் இணைந்து கொண்டு பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அந்த காட்சியை நிவின் காதலித்து வரும் காவேரியின் அக்கா கங்கா பார்த்து விடுகிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு தற்போது இந்த சீரியலில் எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் சற்றே வித்தியாசமான கதையம்சம் கொண்டது “நான்கு சகோதரிகளின் கதை” என்ற ஒற்றை வரியுடன் இந்த கதை ஆரம்பிக்கப்பட்டது. தந்தையை இழந்த நான்கு பெண் பிள்ளைகள் சமூகத்தில் எந்த அளவிற்கு உயரத்திற்கு செல்கின்றனர், அவர்களுக்கு கணவனாக வரும் நபர்கள் அவர்களுக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது குறித்த கதையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரியை கழட்டி விட்டு ராகினியுடன் ஊர் சுற்றும் நிவின்.? பார்த்துவிட்ட கங்கா.! இனி நடக்கப்போவது என்ன? 1

விளம்பரம்

இந்த நாடகத்தை பிரவீன் பென்னட் இயக்க, குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நாடகம் இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாடகத்தில் நான்கு அக்கா தங்கைகளில் மூத்தவர் கங்காவை அவரது அத்தை மகன் குமரன் திருமணம் செய்து கொள்கிறார். தற்போது கதைப்படி குமரன் கங்கா அவரது தங்கைகள் காவேரி யமுனா நர்மதா ஆகியோர் சென்னைக்கு டூருக்கு செல்கின்றனர் அப்போது நிவினும் அங்கு வருகிறார். அங்கு நிவின் தனது காதலை காவேரியிடம் சொல்கிறார். காவிரியும் நிவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் காவிரியின் அடுத்த தங்கையாக இருக்கும் யமுனாவும் நிவின் மீது காதல் கொண்டார். இதனால் கதை சற்று விறுவிறுப்பாக இருந்தது. இந்த நிலையில் நிவினின் அத்தை மகள் ராகினி என்பவர் கதையில் புது என்ட்ரியாக வந்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நிவினை அழைத்துக் கொண்டு பைக்கில் ரைடு செல்கிறார்.

தொடர்புடையவை  கதிரையும் ஞானத்தையும் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.! எதிர்நீச்சல் ப்ரோமோ

காவேரியை கழட்டி விட்டு ராகினியுடன் ஊர் சுற்றும் நிவின்.? பார்த்துவிட்ட கங்கா.! இனி நடக்கப்போவது என்ன? 3

விளம்பரம்

இதை காவேரியின் அக்கா கங்கா பார்த்து விடுகிறார். எவ்வளவு நாள் காவேரியின் பின்னால் சுற்றிவிட்டு, தற்போது இப்படி ஏமாற்றுகிறாயா என்று சொல்லி அவர் நிவின் மீது கோபம் கொள்கிறார். ஆனால் உண்மையில் நிவினுக்கு ராகினியை பிடிக்கவில்லை, அவர் வேண்டா வெறுப்பாக கட்டாயத்தின் பேரில்தான் அவரை அழைத்துக்கொண்டு பைக்கில் வெளியில் சென்று இருக்கிறார். இது ஒரு வேலை காவேரிக்கு தெரிய வந்தால் நிவினின் காதலை முறிப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் கமெண்ட்களில் அப்படி எதுவும் நடக்கக்கூடாது, நிவின் காவேரி தான் நல்ல ஜோடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment