பல வருடங்களாக தமிழக மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த சேனலாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர்கள்தான் எதிர்நீச்சல் மற்றும் கயல். பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கயலாக நடிகை சைத்ரா ரெட்டியும், எழிலாக நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கும் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் மீனா குமாரி, ஐயப்பன், அபிநவ்யா, கோபி, ஐஸ்வர்யா என பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரின் கதை குறித்து பார்த்தோம் என்றால் கயல் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அவர் குடும்ப பாரத்தை சுமக்கும் ஒரு உறுதியான பெண்ணாக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தையை இழந்த கயல் தனது குடும்ப உறுப்பினர்களின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்காக தனி ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்தின் பாரங்களை சுமக்கிறார். அதற்கிடையே ஏற்படும் தடைகள் மற்றும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு தனது சொந்த பெரியப்பா தீட்டும் பல்வேறு சதித்திட்டங்களையும் சமாளித்து குடும்பத்தை அரணாக காத்து வருகிற கயல் என்ற பெண்ணின் கதையாக இந்த கதை இருந்து வருகிறது. இதற்கிடையில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த எழிலுடன் கயலுக்கு காதல் ஏற்பட இந்த கதை விறுவிறுப்பாக மாறி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற பரபரப்பு எழுந்து வருகிறது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கயல் எழில் திருமணம் நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கயல் எழிலுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்தை தேடி தற்போது வந்திருக்கிறார்.

அங்கு எழிலிடம் கயல் சோகமாக பேசிக் கொண்டிருக்கிறார். எழிலைப் பார்த்து இவ்வளவு நாள் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் தற்போது பேசாமல் போனால் அது மிகவும் வலிப்பதாக கூறுகிறார். கயலின் இந்த வார்த்தையை கேட்ட எழில் பதில் எதுவும் அளிக்காமல் கடுப்பாகி உள்ளே செல்கிறார். மேலும் தனது நண்பரிடம் நான் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று கூறுகிறார். இதை கேட்ட எழிலின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கின்றனர். இதனால் ஏமாற்றமாக உணரும் கயல் அப்படியே திருமண மண்டபத்தின் வாசலிலேயே அழுது கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV