விடுதலை இரண்டாம் பாகத்திற்காக சூரி தற்போது தயாராகி இருப்பது போன்ற ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தலைமுடியை வெட்டி, போலீஸ் யூனிபார்ம் அணிந்து தற்போது அவர் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி இருக்கிறார். அந்த வீடியோவை அவரை தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு “குமரேசன் ரெடி” என கேப்ஷனுடன் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. “டேய் குமரேசா, ஐயா கூப்பிடுறாருடா” என்று சொன்னவுடனேயே துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சூரி வெளியில் செல்வது போலவும் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தற்போது தெரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் விடுதலை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது சூரி ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து இருக்கிறார். விஜய் சேதுபதி, சூரி, நடிகர்கள் சேர்த்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் பெருமாள் வாத்தியாராக இருக்கும் விஜய் சேதுபதி மக்களுக்கு நன்மை பெற வேண்டும் என்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அமைப்பை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்குகின்றனர்.

பெருமாள் வாத்தியாரை கண்டுபிடிக்கும் அந்த திட்டத்தில் வந்து இணைகிறார் சூரி. பின்னர் அவர்தான் பெருமாள் வாத்தியார் இருக்கும் இடம் கண்டுபிடிக்கிறார். பின்னர் என்ன நடந்தது? பெருமாள் வாத்தியாருக்கும் சூரிக்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதை இரண்டாம் பாகத்தில் காட்டுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது முடியை வெட்டி போலீஸ் உடை அணிந்து குமரேசன், பெருமாள் வாத்தியாரை பிடிப்பதற்காக செல்வது போன்ற ஒரு வீடியோவை சூரியே வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O