நாடகக் காதலுக்கு உதாரணம் கேட்டவன் எல்லாம் இத பாருங்க.! விக்ரமன் பற்றி பதிவிட்ட மோகன் ஜி.!

பிக்பாஸில் கலந்து கொண்ட விக்ரமன் குறித்து தற்போது மோகன் ஜி புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். நாடக காதல் பற்றியும் அவர் நேரடியாக விமர்சித்து இருக்கிறார். செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து சில சீரியல்களிலும் நடித்திருந்த விக்ரமனுக்கு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையை கொடுத்த நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் நேற்று தொடங்கி சமூக வலைத்தளங்களில் பூதாகரமாகி இருந்தது. விக்ரமன் பயன்படுத்தும் கார் பொருட்கள் அனைத்தும் தன்னுடைய பணத்தில் வாங்கி கொடுத்ததாக அவர் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுபோல 15 பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாகவும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்ற பெண் புகார் அளித்திருந்தார்.

நாடகக் காதலுக்கு உதாரணம் கேட்டவன் எல்லாம் இத பாருங்க.! விக்ரமன் பற்றி பதிவிட்ட மோகன் ஜி.! 1
இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில் நேற்று விக்ரமனை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக அசீம் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர் நீ பற்ற வைத்து நெருப்பு ஒன்று உன்னை பற்றி எரிய கேட்கும், நீ விதைத்த விதை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. விக்ரமனை தான் அவர் மறைமுகமாக சாடி இருப்பதாக பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று பதிலளித்த விக்ரமன் நான் கிருபாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்காகவும், தன்னுடைய அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையை முடக்கும் நோக்கிலும் அவர் தன் மீது இவ்வாறு அபாண்ட குற்றச்சாட்டை சுமத்துவதாக விளக்கம் அளித்திருந்தார். மேலும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே அவருக்கு சேர வேண்டிய 12 லட்சம் ரூபாயை கொடுத்திருந்ததாகவும் விக்ரமன் விளக்கம் அளித்து இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? தீயாய் பரவும் தகவல் .! உண்மை என்ன?

நாடகக் காதலுக்கு உதாரணம் கேட்டவன் எல்லாம் இத பாருங்க.! விக்ரமன் பற்றி பதிவிட்ட மோகன் ஜி.! 3
தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வரும் இந்த நிகழ்வு குறித்து தற்போது சர்ச்சைக்குரிய இயக்குனர் மோகன் ஜி கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் நாடக காதலுக்கு அர்த்தம் கேட்டவனுக்கு எல்லாம் இந்தா உதாரணம், பாட்டாவே பாடி இருக்காங்க பாரு என்று சொல்லி கிருபா முனுசாமி வெளியிட்ட ஆதாரங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நாடகக் காதலுக்கு உதாரணம் கேட்டவன் எல்லாம் இத பாருங்க.! விக்ரமன் பற்றி பதிவிட்ட மோகன் ஜி.! 5

விளம்பரம்

ஏற்கனவே தனது படங்களில் நாடக்க் காதல் குறித்தும் குறிப்பிட்ட ஜாதியை மட்டுமே உயர்த்திப் பேசுவதாக மோகன் ஜி மீது பலரும் விமர்சனங்களை கூறி வரும் நிலையில் தற்போது அவர் நாடக காதல் பற்றி பதிவிட்டிருப்பது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது..!

விளம்பரம்

Leave a Comment