ஆர்த்தியுடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் எழில்.! மனமுடைந்து அழும் கயல்.! சோகமான ப்ரோமோ.!

கயல் சீரியலில் அடுத்தடுத்த பரபரப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது எழில் ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஆர்த்தியுடன் மாலையும் கழித்துமாக எழில் நிற்பதை பார்த்த கயல் கண்கலங்கி மணமுடைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. நாடகங்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்று இருக்கும் ஒரு தொடர் தான் கயல் சீரியல். எதிர்நீச்சல் மற்றும் கயல் இரண்டு சீரியல்களும் முதல் இரண்டு இடத்தை பிடிக்க போட்டோ போட்டி போட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது கயல் சீரியல் மிகுந்த பரபரப்பான கட்டங்களை ஒளிபரப்பி வருகிறது. கயல் காதலித்து வரும் எழில் என்பவர் ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தியுடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் எழில்.! மனமுடைந்து அழும் கயல்.! சோகமான ப்ரோமோ.! 1

விளம்பரம்

ஆர்த்தி தனது பெரியப்பாவின் மகளாக இருக்கும் நிலையில், கயலால் எதுவும் செய்ய முடியவில்லை. கயலும் எழிலும் காதலித்து வருவதால் கயலுடன் தான் எழிலுக்கு திருமணம் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் திருமண மண்டபத்திற்கு வரும் கயல் எழிலிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது கயலின் பெரியம்மா அவரிடம் பேசக்கூடாது அவருக்கும் ஆர்த்திக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது. நீங்கள் வந்த வழியே திரும்பி போங்கள் என்று சொல்லி அடிக்க கையை ஓங்குகிறார். அப்போது கடுப்பான கயல் எழிலிடம், “இவ்வளவு நாள் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென பேசாமல் போனால் அதன் வலி அதிகமாக இருக்கும்” என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் கயிலை சிறிதும் மதிக்காமல் எழில் அவரிடமிருந்து விலகிச் செல்கிறார். பின்னர் தனது நண்பரிடம் நான் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று கூறுகிறார்.

தொடர்புடையவை  சோப்பு தண்ணியில் நடக்க விட்ட பிக்பாஸ்.! தலைகுப்புற கவிழ்ந்தடித்து விழுந்த ஹவுஸ்மேட்ஸ்.!

ஆர்த்தியுடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் எழில்.! மனமுடைந்து அழும் கயல்.! சோகமான ப்ரோமோ.! 3

விளம்பரம்

இதைக் கேட்கும் ஆர்த்தியின் பெற்றோர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆர்த்தியும் எழிலும் மாலையும் கழுத்துமாக மேடையில் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதை பார்த்த கயல் கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்னும் எவ்வளவு நாள் இந்த சஸ்பென்ஸ் நீடிக்குமென்று தெரியாது. எனவே விரைவில் இருவருக்கும் திருமணத்தை முடிக்குமாறு ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment