சரஸ்வதிக்காக தமிழ் செய்த மிகப் பெரிய விஷயம்.! இப்படி ஒரு கணவர் அமைய குடுத்து வச்சிருக்கணும்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் சரஸ்வதிக்கு தெரியாமலேயே அவருக்கு மிகப்பெரிய கிப்ட் ஒன்றை அளித்திருக்கிறார். இதனால் நெகிழ்ந்து போயிருக்கிறார் சரஸ்வதி. அந்த அழகான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. பலரும் இந்த சீரியலை விரும்பிப் பார்க்க தொடங்கி இருக்கின்றனர். அர்ஜுன் செய்த சதியால் தன் தாயாலேயே வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட தமிழ், தற்போது தனது உழைப்பாலும் திறமையாலும் அசோசியேஷன் தேர்தலில் நின்று ஜெயித்து சேர்மன் ஆக பதவியேற்று இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதிக்காக தமிழ் செய்த மிகப் பெரிய விஷயம்.! இப்படி ஒரு கணவர் அமைய குடுத்து வச்சிருக்கணும்.! 1
ஒருபுறம் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என புரிந்து கொள்ளும் கோதை, தனது மருமகன் அர்ஜூன் மீது சந்தேகப்படத் தொடங்குகிறார். நமது மருமகன் அர்ஜூன் நமது கம்பெனியின் நற்பெயரை கெடுக்க ஏதோ திட்டமிடுகிறார் என்பதை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறார் கோதை. இனி வரும் எபிசோடுகளில் அர்ஜுனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு தமிழை மீண்டும் தன் மகனாக வீட்டுக்குள் சேர்த்துக் கொள்வார் என்று தெரிகிறது. இவ்வாறு கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் வீட்டிலிருந்து வெளியேறிய போது குடும்ப பாரத்தை சுமப்பதற்காக சரஸ்வதி ஒரு மெக்கானிக் கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கு இன்று செல்லும் சரஸ்வதி அழுது கொண்டே இனி தன்னால் வர முடியாது என்று கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீங்க பண்ற சில விஷயங்கள் எனக்கு சுத்தமா புடிக்கல.! ADK முகத்தில் அடித்தார் போல கூறிய அசல்

சரஸ்வதிக்காக தமிழ் செய்த மிகப் பெரிய விஷயம்.! இப்படி ஒரு கணவர் அமைய குடுத்து வச்சிருக்கணும்.! 3

அதைக் கேட்ட மெக்கானிக் ஷாப் ஓனர் எதுவும் தெரியாதது போல் பேசாதீர்கள் காலையிலேயே உங்கள் கணவர் தமிழ் வந்து இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து இந்த மெக்கானிக் ஷாப்பை விலைக்கு வாங்கிவிட்டார். இனி இது “சரஸ்வதி மெக்கானிக் ஷாப்” என்று பத்திரங்களை கொடுக்கிறார். இதனால் நெகிழ்ந்து போன சரஸ்வதி நேராக சென்று தமிழிடம் பேசுகிறார். அப்போது தமிழ் இனிமேல் மெக்கானிக் கடைக்கு வேலைக்கு போகக்கூடாது என்று காமெடியாக சொல்ல, பின்னர் நெகிழ்ந்து போன சரஸ்வதி தமிழை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment