எதிர்நீச்சல் மாரிமுத்துவின் 57வது பிறந்தநாள்.! ஒட்டுமொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாட்டம்.!

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் பிறந்தநாளை சீரியல் குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். மேலும் நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் மாரிமுத்து. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. பலரும் மாரிமுத்துவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் 57வது பிறந்தநாள்.! ஒட்டுமொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாட்டம்.! 1
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, கோடிக்கணக்கான மக்களால் ரசிக்கப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்ட ஆண்களுக்கு மருமகள்களாக வரும் பெண்கள் படும் பாட்டையும், ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து அவர்கள் பேசும் புரட்சிகர வசனங்களுமே இந்த சீரியலின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், இளைஞர்கள் என அனைவரின் மனம் கவர்ந்த சீரியலாக இது இருந்து வருகிறது.

விளம்பரம்

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் 57வது பிறந்தநாள்.! ஒட்டுமொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாட்டம்.! 3
இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் நடிகர் மாரிமுத்து தான். ஆதி குணசேகரன் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்து பல குடும்ப பெண்களின் சாபத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார் மாரிமுத்து. மேலும் இவர் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தையும், 2014 ஆம் ஆண்டு வெளியான புலிவால் என்கிற இரு படங்களையும் இயக்கி இருக்கிறார்.

தொடர்புடையவை  வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து 200 குடும்பங்களுக்கு உதவி செய்த KPY பாலா.!

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் 57வது பிறந்தநாள்.! ஒட்டுமொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாட்டம்.! 5
1967 ஆம் ஆண்டு பிறந்த இவர் தேனியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த அவருக்கு பாடலாசிரியர் வைரமுத்து அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் திரைத்துறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தார். அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி. இருக்கிறார் மணிரத்னம், வசந்த், சீமான் எஸ் ஜே சூர்யா போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

விளம்பரம்

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் 57வது பிறந்தநாள்.! ஒட்டுமொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாட்டம்.! 7
பின்னர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. ஆரோகணம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது போன்ற படங்களில் நடித்தார். விக்ரம் படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார். தற்போது ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  கோபியை கேள்விகளால் கிழித்தெடுக்கும் ராதிகா.! பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் கோபி..!

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் 57வது பிறந்தநாள்.! ஒட்டுமொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாட்டம்.! 9
இந்த நிலையில் 56 வயதை முடித்த அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் வீட்டில் வைத்து இந்த பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இதில் இயக்குனர் திருச்செல்வம், எதிர்நீச்சல் சீரியல் வசனகர்த்தா, மாரிமுத்துவின் மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment