ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை மனோஜிடம் உடைத்த ரோஹிணி.!

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகினி தற்போது மனோஜ்க்கு போன் செய்து தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகத் தொடங்கி தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது சிறகடிக்க ஆசை. இதில் நடிகர் வெற்றிவசந்த் முத்து என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்க நடிகை கோமதி பிரியா மீனாவாக ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தண்ணி அடித்துக்கொண்டு ஊதாரியாக இருக்கும் முத்துவை குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கும் மீனா திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இருவருக்கும் விருப்பம் இல்லாமல் இந்த திருமணம் நடந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை மனோஜிடம் உடைத்த ரோஹிணி.! 1

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. முத்துவும் மீனாகவும் தற்போது இணைந்திருக்கின்றனர். இதனால் சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முத்துவின் மூத்த அண்ணன் மனோஜ்க்கு தற்போது முத்துவின் தாயார் விஜயா திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இதில் பல பிரச்சினைகள் உருவாகிறது. மனோஜ்க்கும் ரோகிணிக்கும் திருமணத்தை கோவிலில் வைத்து நடத்த விஜயா திட்டமிடுகிறார். ஆனால் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ரோகினி மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் முத்து மற்றும் மீனா இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர். இந்த நிலையில் தற்போது ரோகிணி மனோஜ்க்கு போன் செய்து தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை போட்டு உடைக்கிறார்.

தொடர்புடையவை  வருணுடன் சேர்ந்து கொண்டு ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட ஸ்ருதி.! இதோ வீடியோ.!

ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை மனோஜிடம் உடைத்த ரோஹிணி.! 3

விளம்பரம்

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளான மனோஜ், தற்போது போனை கட் செய்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் ரோகிணிக்கும் மனோஜ்க்கும் திருமணம் நடைபெறுமா? அடுத்து நிகழப் போவது என்ன என்று பரபரப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment