இந்த ஆண்டின் சிறந்த காமெடி படங்கள் இவை தான்.! பெரிய பட்டியல் போட்ட ப்ளூ சட்டை மாறன்.!

தமிழ் திரையுலகில் சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படங்கள் என்னென்ன தகுதி பெற்றிருக்கிறது என்பது குறித்து விமர்சித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் இந்த வருடத்தின் சிறந்த படங்கள் மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்து குறைந்த வசூல் பெற்ற படங்கள் காமெடி படங்கள் என்று சொல்லி படங்களின் பட்டியலை வரிசையாக பதிவிட்டு இருக்கிறார். அதில் விஜய் ஆண்டனியின் கொலை, ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஆர்யாவின் காதர் பாட்ஷா, தோனி தயாரித்த எல்.ஜி.எம் திரைப்படங்கள் ஆகியவற்றை கூட அவர் காமெடி படங்கள் பட்டியலில் இணைத்திருக்கிறார்.

இந்த ஆண்டின் சிறந்த காமெடி படங்கள் இவை தான்.! பெரிய பட்டியல் போட்ட ப்ளூ சட்டை மாறன்.! 1

விளம்பரம்

புதிதாக எந்த படம் வந்தாலும் அந்த படத்தை முதல் நாளிலேயே பார்த்துவிட்டு அது குறித்து காரசாரமாக விமர்சனம் செய்யும் ஒருவராக இருந்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனத்தை பலரும் எதிர்க்கும் நிலையில், பலர் இவருக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். இவரின் வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெறுவது வழக்கமாக இருக்கிறது.

தொடர்புடையவை  துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!!

மேலும் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள், மிகப்பெரிய இயக்குனர்களின் படங்கள், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்கள், லோ பட்ஜெட் படங்கள், அறிமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் என்று அனைத்து விதமான படங்களையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சித்து வருகிறார். சில சமயம் இவரின் விமர்சனம் எல்லை மீறி தனிப்பட்ட தாக்குதலாகவும் மாறி வருகிறது. இதனால் ரசிகர்கள் சில சமயம் இவர் மீது கோபத்தை வெளிப்படுத்துவதும் உண்டு. எடுத்துக்காட்டாக பார்த்திபனுக்கு எதிராக இவர் சமீப காலமாக பலமுறை விமர்சனங்களை முன் வைத்து சர்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

இந்த ஆண்டின் சிறந்த காமெடி படங்கள் இவை தான்.! பெரிய பட்டியல் போட்ட ப்ளூ சட்டை மாறன்.! 3

இந்த நிலையில் இன்றைக்கு புதிய பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். ஜூலை மாதம் வரை இந்த ஆண்டில் வெளியான படங்கள் குறித்து தன்னுடைய பக்கத்தில் விமர்சனம் செய்திருக்கிறார். அதில் முதலில் 2023 ஆம் ஆண்டு ஹிட் அடித்த படங்கள் என்று டாடா, குட்நைட், போர்த் தொழில் மற்றும் டிடி ரிட்டன்ஸ் படங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

மேலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்களாக பிகினிங், அயோத்தி, விடுதலை பாகம் 1, மாமன்னன், சத்திய சோதனை ஆகிய படங்களை குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு குறைந்த வசூலைப் பெற்ற படம் என்று பொன்னியின் செல்வன் பாகம் இரண்டையும், அட்டகத்தி தினேஷின் பல்லு படாமல் பாத்துக்க படம் மிகவும் கேவலமான தலைப்பை கொண்ட படம் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார். மேலும் சிறந்த காமெடி படங்கள் என்று சொல்லி ருத்ரன், காதர் பாஷா, கொலை, எல்ஜிஎம் ஆகிய படங்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இவர் காமெடி என்று குறிப்பிட்ட படங்கள் அனைத்துமே ஆக்ஷன், ஹாரர் மற்றும் காதல் கதையை சேர்ந்த படங்களாகும்.

தொடர்புடையவை  H.வினோத்துடன் இணைந்து கமல் நடிக்கும் 233வது படத்திலிருந்து வெளியான மாஸ் வீடியோ..!

இந்த ஆண்டின் சிறந்த காமெடி படங்கள் இவை தான்.! பெரிய பட்டியல் போட்ட ப்ளூ சட்டை மாறன்.! 5

விளம்பரம்

அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறன் அடுத்த சர்ச்சையை தொடங்கி விட்டதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலரோ ப்ளூ சட்டை மாறனின் இந்த பட்டியலை சரியாக கணித்திருப்பதாக கூறி பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.!

விளம்பரம்

Leave a Comment