சரத்குமார் மற்றும் விஐபி பட வில்லன் அமிதாஷ் பிரதான் நடித்திருக்கும் பரம்பொருள் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் யுவனுடன் இணைந்து தற்போது அனிருத் பாடியிருக்கும் அந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போர் தொழில் படத்திற்கு பின்னர் சரத்குமார் மதிப்பு கணிசமாக உயர்ந்து இருக்கிறது. அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. போர் தொழில் திரைப்படத்தில் ஒரு கட்டுக்கோப்பான அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார் சரத்குமார். இந்த நிலையில் அதேபோல சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் பரம்பொருள் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்திலிருந்து யுவனும் அனிருத்தும் இணைந்து பாடியிருக்கும் புதிய பாடல் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சி அரவிந்த்ராஜ் இயக்கியிருக்கும் படம் தான் பரம்பொருள் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஐபி படத்தில் வில்லனாக நடித்திருந்த அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடிப் பயணம் செய்கின்றனர். போர்த் தொழில் படத்தில் வருவது போல கண்டிப்பான அதிகாரியாக இல்லாமல், மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடத்தப்படும் சிலைகளை போலீசார் மீட்டுக் கொண்டு வரும் பொழுது அதை சோதனை செய்யும் அதிகாரியாக அமிதாஷ் பிரதான் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து எப்படி சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டறிகிறார்கள் என்ற சுவாரஸ்யமான பின்னணியுடன் இந்த படம் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக “அடியாத்தி” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அனிருத்தும் பாடியிருக்கிறார். இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: U1 Records