தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்திலிருந்து அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. வில்லனாக நடிக்கும் நடிகர் அர்ஜுனனின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி தற்போது அந்த புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர். வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை அள்ளிக் குவித்திருக்கிறது. அர்ஜுன், விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் போல மிகக் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தி பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் படம் வேற லெவலில் வந்திருக்கும் போலயே என்று கமெண்ட்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தளபதி நடித்து வரும் லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் தளபதியின் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளை படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

படத்திலிருந்து வெளியான நான் ரெடி தான் பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருந்தனர். ஆண்டனி தாஸ் என்று வில்லனாக மிரட்டும் அந்த வீடியோ வெளியாகி 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு “ஹரால்ட் தாஸ்” என்கிற வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவில் வில்லனாக விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் போல் முகம் முழுவதும் ரத்தமாக அவர் இருக்கிறார். அந்த அதிரடியான வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South