பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த கிரஹபிரவேசம்.! அழகான ப்ரோமோ இதோ.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நான்கு அண்ணன் தம்பிகளும் மளிகை கடை நடத்தி ஒரு குடும்பத்தை எவ்வாறு கட்டுக்கோப்பாக நடத்தி வருகின்றனர் என்பதும், அவர்களுக்கு மனைவிகளாக வரும் பெண்கள் எவ்வாறு ஒற்றுமையாக குடும்பத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்துகின்றனர் என்பது குறித்த கதையாக தான் இது இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த கிரஹபிரவேசம்.! அழகான ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

சமீப காலமாக கதையில் சில சுணக்கங்கள் ஏற்பட்டு இருந்தது. அனைத்து மருமகள்களும் கர்ப்பமாக இருப்பதும், தொடர்ந்து தனத்திற்கு கேன்சர் என்றும் கதை ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தது. இதனால் ரசிகர்கள் பொறுமையை இழந்து இருந்தனர். இதை மீட்டு எடுக்கும் வகையில் தற்போது கதையை விறுவிறுப்பாக மாற்றி இருக்கிறார் இயக்குனர். அந்த வகையில் பல நாட்களாக கட்டப்பட்டு வந்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தற்போது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதை ப்ரோமோவாக தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.

தொடர்புடையவை  6 வருடங்களுக்கு பின் பிறந்த மகன்.! முகத்தை முதல் முறையாக காட்டிய பாண்டவர் இல்லம் அனு.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த கிரஹபிரவேசம்.! அழகான ப்ரோமோ இதோ.! 3

விளம்பரம்

நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment