ஐஸ்வர்யாவை கழட்டி விட்ட கௌதமுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.! ஐஸ்வர்யா எடுக்க போகும் முடிவு என்ன?

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ஆஹா கல்யாணம் சீரியல். தற்போது இந்த சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக மாறிப் போயிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இதில் கௌதம் சூர்யாவிடம் மாட்டுவானா இல்லையா என்பதுதான். சூர்யாவிற்கு நிச்சயித்திருந்த ஐஸ்வர்யாவை அவரது தம்பி கௌதம் திருமணத்தன்று கடத்திக் கொண்டு சென்று விட்டார். பின்னர் சூர்யா வேறு வழியில்லாமல் அந்தப் ஐஸ்வர்யாவின் தங்கை மஹாவை திருமணம் செய்து கொள்கிறார். மஹா திட்டமிட்டு தான் இதுபோல் செய்திருப்பதாக சூர்யா அவர் மீது கோபம் கொள்கிறார். மேலும் ஐஸ்வர்யா பணக்கார குடும்பம் என்று நம்பி சூர்யா ஏமாந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவை கழட்டி விட்ட கௌதமுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.! ஐஸ்வர்யா எடுக்க போகும் முடிவு என்ன? 1

விளம்பரம்

ஐஸ்வர்யாவை கடத்திச் சென்ற கௌதமிற்க்கும் இவர்கள் பணக்கார குடும்பம் இல்லை என்பது தெரியவந்தது. எனவே கௌதம் எப்படியாவது ஐஸ்வர்யாவை கழட்டி விட திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கௌதமிற்க்கு கால் செய்த ஐஸ்வர்யா என்னுடைய பழைய நண்பர் அருண் என்னை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி வீட்டில் வந்து என் அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான். இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என தனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் கௌதம் வெண்ணிலா விஷயம் ஒரு பக்கம் ஓகே ஆயிடுச்சு, இப்போ ஐஸ்வர்யாவுக்கு கல்யாணமும் முடிவாகிருச்சு.

தொடர்புடையவை  பிரியங்கா நீங்க ஒன்னும் பெரிய ஆள் இல்லை..! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன்..! மணிமேகலை அதிரடி..!

ஐஸ்வர்யாவை கழட்டி விட்ட கௌதமுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.! ஐஸ்வர்யா எடுக்க போகும் முடிவு என்ன? 3

விளம்பரம்

எனவே இவளை கழட்டி விட வேண்டியது தான் என்று சொல்லி மனதிற்குள் சந்தோஷப்படுகிறார். பின்னர் ஐஸ்வர்யாவிடம் நீ அவனை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இரு, நீ சந்தோஷமாக இருந்தால் அந்த திருப்தியிலேயே நான் வாழ்ந்து விடுவேன் என்று போனை கௌதம் கட் செய்து விடுகிறார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துகிறேன் பார் என்று சொல்லி சவால் விடுகிறார். நீங்களும் அந்த ப்ரோமாவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment