குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் குக்குகளாக வரப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், குக்குகளை அறிமுகப்படுத்தி தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கியமான ரியாலிட்டி ஷோக்கள்தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. பிக் பாஸ் முடிந்த கையோடு விஜய் டிவி ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் தற்போது சீசன் 4 வெகு விமர்சையாக தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான ப்ரோமோ ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி இருக்கிறது. இன்று காலை வெளியாகியிருந்த ப்ரோமோவில் கோமாளிகள் பலர் மாற்றப்பட்டு இருந்தனர். சிவாங்கி, KPY பாலா போன்றவர்கள் அந்த ப்ரோமோவில் இடம் பெறவில்லை. பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரேஷி, ஆகிய மூவர் மட்டுமே அந்த ப்ரோமோவில் இடம் பெற்றிருந்தனர். பல புதிய கோமாளிகளை களம் இறக்கி இருக்கிறது கோமாளி நிகழ்ச்சி. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரை புதிய கோமாளிகளாக அறிமுகப்படுத்தி இருக்கிறது விஜய் டிவி. வழக்கம் போல் ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருப்பது போல ப்ரோமோ வெளியாகியிருந்தது. இந்த நிலையில் புதிய குக்குகளாக யாரெல்லாம் இருப்பார்கள் என்று மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் புதிய குக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் மேகா படத்தில் ஹீரோயினாக நடித்த சிருஷ்டி, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரின் சிரிங்கர், ரஜினியுடன் முத்து படத்தில் நடித்திருந்த விசித்ரா, நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷால் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக வலம் வந்த சிவாங்கி தற்போது குக்காக களம் இறங்கி இருக்கிறார். இது மட்டுமில்லாமல் வெளிநாட்டுக்கார பெண் ஒருவரையும் குக்காக அழைத்து வந்து இருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து பிக்பாஸில் கலந்து கொண்டிருந்த தாமரைச்செல்வி, நடிகை வாசுகி, சீசன் 2 வின்னர் கனியின் சகோதரி விஜயலட்சுமி, பிக்பாஸ் பிரலம் ஆர் ஜே அர்ச்சனா போன்றவர்களும் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இவர்கள் நான்கு பேரும் இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இதுவரை வெளியான வரையிலும் ப்ரோமக்களிலும் இவர்களின் நான்கு பெயர்கள் வெளியாகவில்லை. எனவே இவர்களுடன் சேர்த்து மொத்தம் 10 குக்குகளை களம் இறங்குவார்களா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television