விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஜீவா விலகிவிட்டாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கும் எழுந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த தொடரில் மீனவாக நடித்து வரும் ஹேமா தனது சமூக வலைத்தளத்தில் போட்டிருக்கும் பதிவுதான். மூர்த்தி ஹேமா மற்றும் ஒரு நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “நியூ ஜீவா” என்று அவர் கேள்விக்குறியுடன் பதிவிட்டு இருக்கிறார். இதனால் இவர் தான் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கும் எழுந்திருக்கிறது.

விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு சகோதரர்களின் பாசத்தையும் கூட்டுக் குடும்பத்தின் அழகையும் விவரித்து கொண்டு இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இதில் இரண்டாவது தம்பியாக ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் வெங்கட்ரங்கநாதன் நடித்து வருகிறார். சில நாட்களாகவே இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்கிற தகவல் கசிந்த வண்ணம் தான் இருக்கிறது. தற்போது அதே தொலைக்காட்சியின் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் கிழக்கு வாசல் சீரியல் தொடரிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எனவே அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.

தற்போது இந்த செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ஷூட்டிங்கில் புதிய நபருடன் புகைப்படம் எடுத்து அதை “நியூ ஜீவா” என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் நிஜமாகவே வெங்கட் ரங்கநாதன் விலகி விட்டாரா? இனி இவர்தான் புதிய ஜீவாவா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!