எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆடிட்டர் மற்றும் வக்கீலிடம் ஆதி குணசேகரன் தனது அப்பத்தா பட்டமாளை கொலை செய்து விடவா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் கதிர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல திருப்பங்களுடன் அதிரடியாக நடந்து வருகிறது. நேற்று எபிசோடில் அப்பத்தா அனைவரையும் வரவழைத்து சக்தி மற்றும் ஜனனி நான் இருக்கும் வரை இந்த வீட்டில் தான் இருப்பார்கள். இல்லை என்றால் 40% பங்கை நானே எடுத்துக் கொள்வேன் என்று கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

40% பங்கில் கீழ் தளத்தை நான் எடுத்துக் கொண்டு மாடியை அடைத்து விடுவேன் பிறகு நீங்கள் மாடியில் தான் அனைவரும் வசிக்க வேண்டும் என்று கூறுகிறார். அப்படியும் இல்லை என்றால் எனது பங்கை இரண்டாக பிரித்து சக்திக்கும் ஜனனிக்கும் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் கோபத்தில் உச்சிக்கு செல்லும் ஆதி குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் இன்று ஆடிட்டர் மற்றும் வக்கீலை சென்று சந்திக்கிறார். அப்போது இருவரும் அவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்த்து விட்டு தான் நாம் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்க முடியும் என்று கூறுகின்றனர். அப்போது கோபமான குணசேகரன் அப்பத்தாவை போட்டு தள்ளி விடவா என்று கேட்கிறார்.

குணசேகரனின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத கதிர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். ஏற்கனவே அப்பத்தாவை கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் 40% பங்கு அவரிடம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவரை உயிருடன் விட்டு விட்டார்கள். எனவே தற்போது மீண்டும் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv