ரவுடிகளை விரட்டி விரட்டி வெளுக்கும் சூர்யா.! ஜெய் பீம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது.!

ஜெய் பீம் படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சியை நீக்கி விட்டீர்களே என்று ஒரு சாராரும் இதை நீக்கியது நல்லது தான் இதை வைத்திருந்தால் இது கமர்சியல் படம் போல ஆகியிருக்கும் என்று மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவுடன் பல நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்திருந்தது. மசாலா படங்களுக்கு மத்தியில் சமூக நீதிப் பார்வையுடன் வெளிவந்த ஜெய் பீம் படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடிகளை விரட்டி விரட்டி வெளுக்கும் சூர்யா.! ஜெய் பீம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது.! 1

விளம்பரம்

நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமால் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல நடிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின மக்கள் எவ்வாறு அடித்து கொலை செய்யப்படுகிறார்கள் என்றும், அவரது கொலைக்கு நீதி கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில் எவ்வாறு நீதியை பெற்றார் என்ற உண்மைக் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. நீதிபதி சந்துரு அவர்களாகவே சூர்யா வாழ, செங்கேணியாக லிஜோமோல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பல சர்ச்சைகளும் வழக்குகளுக்கும் மத்தியில் படம் இன்றளவும் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது.

தொடர்புடையவை  ஏன் லேட்டா வந்தீங்க..! சூர்யாவிடம் சண்டையிட்ட செய்தியாளர்..! வைரலாகும் வீடியோ..!

ரவுடிகளை விரட்டி விரட்டி வெளுக்கும் சூர்யா.! ஜெய் பீம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது.! 3

விளம்பரம்

இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி என்று சொல்லி ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் முடிந்து வரும் தம்பதிகளை பத்திரபதிவு அலுவலகத்தில் வெளியில் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அதை சூர்யா தடுத்து நிறுத்தி அவர்களை அடித்து துவைக்கிறார். இந்த காட்சியைப் பார்த்த பலரும் இந்த காட்சியை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்க, வேறு சிலரோ கமர்சியல் படமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கினாரா? அல்லது படத்தின் நீளத்தை குறைக்க இயக்குனர் இதை நீக்கிவிட்டாரா? என்று தெரியவில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment