விஜய் டிவியின் சின்னத்திரை நடிகராக வலம் வரும் நாஞ்சில் விஜயனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்த நிலையில் இன்று வரவேற்பு நடந்து முடிந்துள்ளது. வரவேற்ப்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோயிலை சேர்ந்த நாஞ்சில் விஜயன் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டில் காமெடியனாக அசத்தி வந்தார்.

பெரும்பாலும் இவர் பெண் வேடங்களையே அணிந்து வருவதால் இவரை பலரும் விமர்சித்து வந்தனர். இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர் அடுத்து கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பெண் வேடமிட்டு தன்னுடைய உடல் மொழியாலும் காமெடியான பேச்சுகளாலும் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் வனிதாவின் மூன்றாவது திருமணத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சூர்யா தேவி என்பவருடன் சண்டையில் ஈடுபட்டு இருவருக்கும் கைகலப்பு வரை சென்றது.

தற்போது பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில் அவருக்கு அவரது குடும்ப நண்பரான மரியா என்பவருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இந்த திருமணத்திற்கு ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் ரமேஷ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.இவர்களுடன் சின்னத்திரை பிரபலங்களாக இருக்கும் பலரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு தற்போது திருமண வரவேற்பு நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பலரும் நாஞ்சில் விஜயனின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram