அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தளபதி.! ஏர்போர்ட்டில் எளிமையாக வந்த விஜய்.!

லியோ பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றிருந்த தளபதி விஜய் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் அவர் நடந்து வரும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது 67-வது படமான லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் productions பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தளபதி.! ஏர்போர்ட்டில் எளிமையாக வந்த விஜய்.! 1

விளம்பரம்

படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகிறது. இங்கிலாந்தில் படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கும் “தளபதி 68” என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ‘தளபதி 68’ படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இளம் வயது கதாபாத்திரம் மற்றும் முதுமை கதாபாத்திரம் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிகளுக்கிடையில் கடந்த மாதம் வெக்கேஷனுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் விஜய்.

தொடர்புடையவை  சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட 'கடைசி விவசாயி'. டாப் 25 படங்களில் தரவரிசையில் 2வது இடம்.!

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தளபதி.! ஏர்போர்ட்டில் எளிமையாக வந்த விஜய்.! 3
விஜய் உடன் வெங்கட் பிரபுவும் சென்று இருந்த நிலையில் கடந்த வாரமே வெங்கட் பிரபு திரும்பிவிட்டார். இந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விஜய் இன்று தான் சென்னை திரும்பியிருக்கிறார். அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்க் அணிந்தபடி மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் சில நேரம் அதிகாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் அவர்களுடன் கலந்துரையாடும் மகிழ்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாக இருக்கிறது. விரைவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment