பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் வேல ராமமூர்த்தி.! வேறு நடிகரை அணுகிய எதிர்நீச்சல் டீம்?

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மறைந்து விட்டதால் அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்திருக்கிறது. வேலராமமூர்த்தி நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சில நாட்களாக வெளியான நிலையில் அவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவரால் இதில் நடிக்க முடியாது என்று தெரிகிறது. எனவே அவருக்கு பதிலாக இரண்டு பெரிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து செப்டம்பர் எட்டாம் தேதி காலை மாரடைப்பால் காலமாகி இருந்தார்.

பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் வேல ராமமூர்த்தி.! வேறு நடிகரை அணுகிய எதிர்நீச்சல் டீம்? 1
மாரிமுத்துவின் மரணம் என்பது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது. 35 ஆண்டுகளாக திரை துறையில் இருந்த போதிலும் தற்போது தான் அவர் வளர்ந்து வந்து கொண்டிருந்தார். விக்ரம், ஜெயிலர் போன்ற பல படங்களிலும் நடித்த அவர் தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு இல்லத்திலும் குடும்ப உறுப்பினர் போல இருந்தார் மாரிமுத்து. அவரது திடீர் மரணம் ரசிகர்கள் பலரையும் கலங்க வைத்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  மௌனராகம் சீரியல் ரவீணாவா இது? என்ன இந்த பொண்ணு இப்படி குத்தாட்டம் போடுறாங்க.!

பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் வேல ராமமூர்த்தி.! வேறு நடிகரை அணுகிய எதிர்நீச்சல் டீம்? 3

அவரது கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்தாலும் அவர் போல் வராது எனவே அந்த கதாபாத்திரத்தை முடித்து விடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தபோதிலும் சன் டிவி குழுமம் என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் விழி பிதுங்கி வருகிறது. இந்த நிலையில் அவரது கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து இருக்கிறார் என்கிற தகவல் சில நாட்களுக்கு முன்பு கசிந்த நிலையில் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் அவருக்கு பதிலாக நடிகர் பசுபதி மற்றும் ராதாரவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் வேல ராமமூர்த்தி.! வேறு நடிகரை அணுகிய எதிர்நீச்சல் டீம்? 5
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

விளம்பரம்

Leave a Comment