ஜேம்ஸ் வசந்தன் உதவியுடன் அம்மாவுக்காக தாமரை செல்வி கட்டிய வீடு.! கிரஹப்பிரவேசம் எப்போன்னு தெரியுமா?

பிக்பாஸ் மூலமாக பிரபலமான தாமரைச்செல்வி தற்போது தனது சொந்த ஊரில் புது வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பலர் உதவியுடன் அவர் அந்த வீட்டை கட்டி முடித்திருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் விரைவில் நடக்க இருக்கிறது. அதற்காக அழைப்பிதழ் ஒன்றை தயார் செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் தாமரை.

ஜேம்ஸ் வசந்தன் உதவியுடன் அம்மாவுக்காக தாமரை செல்வி கட்டிய வீடு.! கிரஹப்பிரவேசம் எப்போன்னு தெரியுமா? 1

விளம்பரம்

தெருக்கூத்து கலைஞராக இருந்த தாமரை தனது குடும்ப பாரதத்தை சுமப்பதற்காக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் பிக்பாஸில் கலந்து கொண்ட அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது. தற்போது சீரியல்களிலும் படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தாமரை. சமீபத்தில் முடிந்த பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஜேம்ஸ் வசந்தன் உதவியுடன் அம்மாவுக்காக தாமரை செல்வி கட்டிய வீடு.! கிரஹப்பிரவேசம் எப்போன்னு தெரியுமா? 3
தற்போது சரத்குமார் நடித்து வரும் ஆழி படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தாமரைச்செல்வி தனது கணவர் மற்றும் மாமியார் பிள்ளைகள் என தனியாக வசித்து வந்த நிலையில் அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோரின் குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலேயே இருந்து வந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஒன்னு தூங்குறீங்க? இல்ல குறை சொல்லுறீங்க? மீம்ஸை காட்டி விக்ரமனை பங்கம் செய்த விஜே பார்வதி.!

ஜேம்ஸ் வசந்தன் உதவியுடன் அம்மாவுக்காக தாமரை செல்வி கட்டிய வீடு.! கிரஹப்பிரவேசம் எப்போன்னு தெரியுமா? 5

இதை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பலரின் உதவியுடன் தாமரைச்செல்வியின் தாய் தந்தையருக்கு ஒரு புது வீடு ஒன்றை கட்டித் தர முடிவு செய்தார். அதன்படி அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு புது வீடு ஒன்றை கட்ட தொடங்கினார் ஜேம்ஸ் வசந்தன்.

விளம்பரம்

ஜேம்ஸ் வசந்தன் உதவியுடன் அம்மாவுக்காக தாமரை செல்வி கட்டிய வீடு.! கிரஹப்பிரவேசம் எப்போன்னு தெரியுமா? 7

கிரவுட் ஃபண்டிங் என சொல்லப்படும் குழுவாக சேர்ந்து பணத்தை திரட்டி இந்த வீட்டை கட்டி முடித்துள்ளனர். இந்த வீட்டின் கட்டிட பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் தாமரை செல்வியின் தந்தை மரணம் அடைந்ததால் வீட்டின் கிரகப்பிரவேசம் தாமதமாகி கொண்டே சென்றது. இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டின் புதுமனை புகுவிழா நடக்க இருக்கிறது.

விளம்பரம்

ஜேம்ஸ் வசந்தன் உதவியுடன் அம்மாவுக்காக தாமரை செல்வி கட்டிய வீடு.! கிரஹப்பிரவேசம் எப்போன்னு தெரியுமா? 9

இதற்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பிக்பாஸ் பிரபலம் ஐக்கி பெர்ரி, தேவ் மேஜர் போன்ற பலரும் வருகை தர இருக்கின்றனர். இந்த அழைப்பிதழை தாமரைச்செல்வி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் தாமரைக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சிகரெட்டை ஊதி தள்ளும் தனலட்சுமி.! வீடியோ ஆதாரங்களை போட்டு கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்.!

Youtube Video Embed Code Credits: Lotus Family

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment